காட்டுப் பயணத்தை ஒத்தி வைத்தார் கோபால்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நேற்று காட்டுக்குள் செல்லத் திட்டமிட்டிருந்த நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு வீரப்பனிடமிருந்து எந்த பதிலும்வரவில்லை.

இதையடுத்து அவர் தனது பயணத்தை ஒத்தி வைத்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

வீரப்பனின் அழைப்பை ஏற்று காட்டுக்குள் செல்ல முயன்ற தமிழ் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறனும் அதைஒத்து வைத்துவிட்டார். தடா கைதிகள் மீதான வழக்கு விசாரணை வரும் 11ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது.நீதிமன்றத்தின் முடிவுக்காக அவர் காத்திருப்பதாகத் தெரிகிறது.

நெடுமாறன் காட்டுக்குள் செல்வதாகக் கூறப்பட்ட அதே நாளில் சில நிருபர்களும் பத்திரிக்கை புகைப்படக்காரர்ஒருவரும் காட்டுக்குள் சென்றனர். ஆனால், அவர்களால் வீரப்பனை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால்அவர்கள் திரும்பி வந்துவிட்டனர்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை இந்தப் பிரச்சனையில் வீரப்பனிடம் எதையுமே விளக்க முடியாதுஎன்பதால் அதற்கு முன் காட்டுக்குள் செல்ல நக்கீரன் ஆசிரியர் கோபாலும் விரும்பவில்லை.

ஆனாலும் ராஜ்குமாரின் நலனைக் கருத்தில் கொண்டு கோபால் மூலம் தொடர்ந்து வீரப்பனுடன் தொடர்பு வைத்துக்கொள்ள அரசுகள் விரும்பின. ஆனால், அதை வீரப்பன் ஏற்கவில்லை. தனது கோரிக்கைகளுக்கு அரசுகளின்தெளிவான பதில்களோடு மட்டுமே தன்னைச் சந்திக்கலாம் என அவன் கோபாலுக்கு நிபந்தனை விதித்துள்ளான.

இதனால், கோபால் தனது பயணத்தை 11ம் பிறகு தான் வைத்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளார். அதற்கு முன்னதாகவீரப்பனிடமிருந்து அழைப்பு வந்தால், அவர் காட்டுக்குள் புறப்பட்டுச் செல்வார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+