பெட்ரோல் விலை உயர்வு: அக்.13-ல் நாடு தழுவிய போராட்டம் நடத்த இடதுசாரி தொழிற்சங்கங்கள் முடிவு
டெல்லி:
பெட்ரோலியப் பொருட்கள் விலைஉயர்வை எதிர்த்து இடதுசாரிக் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் வரும் 13 ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்போவதாக சனிக்கிழமை அறிவித்துள்ளன.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி, மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் ஆகியவற்றின்விலையை உயர்த்தியது.
இதை எதிர்த்து ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அஜித் குமார் பாஞ்சா ஆகியோர் ராஜினாமா செய்தனர். பின்னர்விலை உயர்வு குறித்து மூட்டுவலி அறுவை சிகிச்சை முடிந்ததும் மீண்டும் ஆலோசிக்கப்படும் என்று பிரதமர் வாஜ்பாய் உறுதியளித்ததையடுத்து மம்தாபானர்ஜி தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றுக் கொண்டது நினைவிருக்கலாம்.
இதற்கிடையே இதைக் கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக இடது சாரிக் கட்சி தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது. அகில இந்திய வர்த்த ஐக்கியசங்கம், இந்திய வர்த்த சம்மேளனம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஹிந்த் மஸ்தூர் சபா ஆகிய கட்சிகள் இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் ஏ.பி.பரதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ், மண்ணெண்ணெய்விலை உயர்வைக் கண்டித்து நாங்கள் போராட்டம் நடத்தவுள்ளோம். இந்த விலை உயர்வு தேவையில்லாதது. மத்திய அரசு வேண்டுமென்றேபெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தி மக்களுக்கு தேவையில்லாத சுமையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் போராட்டம் அக்டோபர் 13 ம் தேதி நடக்கும். இந்தப் போராட்டத்தையொட்டி, பேரணி மற்றும் ஊர்வலங்கள நடத்துவோம். ஆனால் அதேநேரம் எங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் எதையும் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும் உத்தேசம் ஏதுமில்லை என்றார்.ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications