மமதாவை வைத்து மத்திய அரசு நாடகம் ..ஜெ.சாடல்
சென்னை:
பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து, ராஜினாமா செய்வது போல் நாடகமாடி விட்டார் மம்தாபானர்ஜி என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சமீபத்தில், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல்கியாஸ் ஆகியவற்றின் விலையை மத்தியஅரசுகடுமையாக உயர்த்தியுள்ளது. இதைக் கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம், புதுவை மற்றும் கட்சி அமைப்புகள்செயல்படும் அனைத்து மாநிலங்களிலும் வரும் 13 ம் தேதி காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும்.
பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வு குறித்து, மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டபோதுஅதில் கலந்து கொண்ட முரசொலி மாறன் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்துள்ளார். மக்கள் நலனில்அக்கறை இல்லாத கருணாநிதியோ விலைஉயர்வை நியாயப்படுத்தி பேசிவருகிறார்.
விலை உயர்வைக் கண்டித்து, தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும், வாஜ்பாய் அரசுக்கு அளித்து வரும்ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி கூறியது ஒரு நாடகம்தான் என்பதுஅம்பலமாகிவிட்டது.
விலைஉயர்வு குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று பிரதமர் வாஜ்பாய் கடிதம் எழுதினாராம். அதைப்பெற்றுக்கொண்ட மம்தா பானர்ஜி, திருப்தி அடைந்து தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றுக் கொண்டாராம்.
மக்களை ஏமாற்றுவதற்காக பாரதிய ஜனதா கூட்டணி நடத்தும் நாடகம் இது. கண்துடைப்பு நாடகத்தை நடத்திடும்மத்திய அரசுக்கு நமது எதிர்ப்பை தார்மீக முறையில் எடுத்துக் காட்டிட அதிமுக வினரும், பொதுமக்களும் இதில்கலந்து கொண்டு இப்போராட்டம் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்ஜெயலலிதா.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications