சேலம், தர்மபுரியில் கன மழை .. 5 பேர் சாவு

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி:

மழை, வெள்ளத்தில் சிக்கி சேலம், தர்மபுரி மாவட்டங்களில் 5 பேர் இறந்தனர்.

தர்மபுரி மாவட்டம் ஒசூரில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கிஇரண்டு சிறுவர்கள் உள்பட 3 பேர் இறந்தனர். ஒசூர் அருகே உள்ள அஞ்செட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர் மதி (41).

இவர் தனது சகோதரர்களின் குழந்தைகளான புஷ்பா (10) மற்றும் லோகேஷ் (8) ஆகியோருடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அருகில் அஞ்செட்டிக்கும் நாட்ராம்பாளையத்திற்கும் இடையே உள்ள ஒருஓடையைக் கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில் இருவரும்அடித்துச் செல்லப்பட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் லோகேசின் உடல் மட்டும்மீட்கப்பட்டது. மற்ற இருவரின் உடல்களைத் தேடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

சேலத்தில் திங்கள்கிழமை பெய்த கனமழையையடுத்து இரண்டுபேர் இறந்தனர். சேலம் மாவட்டம், வாழப்பாடிஅருகே உள்ள பெத்தாநாயக்கன் பாளையத்தில் மழைக்கு ஒருவர் பலியானார்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள பெத்தாநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் வசந்தா (40). இவர்வயலில் வேலையை முடித்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மழையில் சிக்கிகீழே வழுக்கி விழுந்தார்.

இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். ஓமலூரில்அங்காளம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் பெரியண்ணன் (60). இவரும் திங்கள்கிழமை பெய்த மழைக்குப்பலியானர். இவர் மழையில் நனைந்து உடல் நலமின்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைபலனின்றி இறந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+