திமுக, பா.ம.க வன்முறை: நஷ்ட ஈடு கோரி வழக்கு
சென்னை:
மதுரை மற்றும் திண்டிவனத்தில் திமுக மற்றும் பாட்டாளி மக்கள் கட்சித்தொண்டர்களால் எரிக்கப்பட்ட பஸ்களுக்கான சேத மதிப்பை அக்கட்சித்தலைவர்களிடமிருந்து வசூலிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்தமனுவை ஏற்றுக் கொள்வது குறித்து திங்கள்கிழமை முடிவு அறிவிப்பதாக நீதிபதிகள்என்.கே.ஜெயின் மற்றும் ரவிராஜ பாண்டியன் தலைமையிலான பெஞ்ச் தெரிவித்தது.
1992-ம் ஆண்டு தமிழக அரசின் பொதுச் சொத்து சேத தடுப்புச் சட்டத்தின் கீழ்இக்கட்சிகளிடமிருந்து நஷ்டத் தொகையை வசூல் செய்ய வேண்டும் என்று இந்தமனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு விவரம்:
சமீபத்தில் இந்த இரு ஊர்களிலும் நடந்த வன்முறையால் பொது மக்கள் பெரிதும்பாதிக்கப்பட்டனர். பொது மற்றும் தனியார் சொத்துக்கள் பெருமளவில்சேதமடைந்தன.
திண்டிவனம் வன்முறை சம்பவத்தில், 50 அரசு பஸ்களு, 100 தனியார் வாகனங்களும்சேதப்படுத்தப்பட்டன. பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாசுக்கு ஆதரவாகபாட்டாளி மக்கள் கட்சியினர் நடத்திய பந்த்தின்போது இந்த வன்முறை நடந்தது.
பாண்டிச்சேரி, கடலூர் மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் ஒரு வார காலத்திற்குபாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக பத்திரிகைகளில்செய்தி வந்துள்ளது.
இந்த சம்பவங்களால் ஏற்பட்ட நஷ்டத்திற்கான தொகையை பாட்டாளி மக்கள் கட்சித்தலைமையிடம் வசூலிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
மதுரை மாவட்டத்தில் நடந்த வன்முறைச் சம்பவத்தில், பல பஸ்கள் சேதமடைந்தன.முதல்வர் கருணாநிதி மகன் அழகிரி தொடர்பாக ஏற்பட்ட இந்த வன்முறையால் மதுரைநகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இரு சம்பவங்கள் தொர்பாகவும் நடவடிக்கை எடுக்குமாறு 19 நாட்களுக்கு முன்புமாநில உள்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பினோம். ஆனால் வன்முறையில்ஈடுபட்டது ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சி என்பதால், எந்தநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த இரு வன்முறைச் சம்பவங்கள் தொடர்ாகவும் இதுவரை எடுக்கப்பட்டநடவடிக்கை குறித்து மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications