தமிழகத்தையே நம்பியிருக்கிறோம் .. கர்நாடக முதல்வர்
பெங்களூர்:
வீரப்பனால் கடத்தப்பட்டுள்ள நடிகர் ராஜ்குமார் மீட்பு விஷயத்தில் கர்நாடகத்தின் பங்கு மிகவும் குறைவுதான்என்று கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.
ராஜ்குமார் கடத்தப்பட்டு 75 நாட்களாகிவிட்டன. அவரை மீட்கும் விஷயத்தில் கர்நாடகத்தின் பங்கு மிகவும்குறைவுதான். இருப்பினும் அவரை மீட்பதற்குரிய அனைத்து முயற்சிகளையும் கர்நாடக அரசு எடுத்து வருகிறது.
இப்போது ராஜ்குமார் பிணைக்கைதியாக வைக்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டில்தான். அதனால் அவரை மீட்பதில்கர்நாடகம், தமிழக அரசை நம்பியிருக்கிறது.
ராஜ்குமார் மீட்பு விஷயத்தில் மத்திய அரசும் தனது கடமையைச் செய்து வருகிறது என்றார் முதல்வர் கிருஷ்ணா.
சுப்ரீம் கோர்ட் உத்தரவு: கார்கே கருத்து
இதற்கிடையே, சுப்ரீம்கோர்ட் உத்தரவால் நடிகர் ராஜ்குமார் விடுதலை எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்றுகர்நாடக காவல் துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.
புதன்கிழமை நிருபர்களிடம் அவர் கூறுகையில், நடிகர் ராஜ்குமாரை மீட் 5 வது முறையாக அரசுத்தூதர் நக்கீரன்கோபால் உள்பட 4 பேர் காட்டுக்குச் சென்றுள்ளனர்.
அவர்களுக்கு வீரப்பனிடமிருந்து சிக்னல் கிடைத்து விட்டது. விரைவில் அவர்கள் வீரப்பனுடன் பேச்சுவார்த்தைநடத்துவார்கள். தடா கைதிகள் விடுதலை குறித்த வழக்கை சுப்ரீம்கோர்ட் 17 ம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளது.
சுப்ரீம்கோர்ட்டில் உள்ள வழக்கு விவரம் குறித்து அவர்கள் வீரப்பனுக்கு எடுத்துக் கூறுவார்கள். மனிதாபிமானமுறையில் தூதுக்குழுவினர் வீரப்பனின் மனதை மாற்றுவார்கள். இந்தமுறை பேச்சுவார்த்தை கண்டிப்பாகவெற்றியில் முடியும்.
ராஜ்குமார் மீட்பு விஷயத்தில் பேச்சுவார்த்தைதான் மிகச்சிறந்த வழி என்று இரு மாநில அரசும் திடமாக நம்புகிறதுஎன்றார் கார்கே.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications