ராஜ்குமார் விடுதலையா? கர்நாடக முதல்வர் விளக்கம்
பெங்களூர்:
கன்னட நடிகர் ராஜ்குமார் திங்கள்கிழமைக்குள் விடுவிக்கப்படுவார் என்று இதுவரைவீரப்பனிடமிருந்து தகவல் ஏதும் வரவில்லை என்று கர்நாடக முதல்வர்எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.
காட்டுக்குள் பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும், திங்கள்கிழமை மாலை,ராஜ்குமார் விடுவிக்கப்படுவார் என்றும் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை செய்திகள்வெளியாகின. இதையடுத்து கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவைத் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டபோது, இதுவரை ராஜ்குமார் விடுதலை தொடர்பாகஉறுதியான தகவல் ஏதும் வீரப்பன் தரப்பிலிருந்து வரவில்லை.
தொடர்ந்து தமிழக முதல்வர் கருணாநிதியுடன் தொடர்பு கொண்டு வருகிறேன்.ராஜ்குமார் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
ராஜ்குமார் மனைவி சென்னை பயணம்?
இதற்கிடையே, ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாவும், அவரது மூன்று மகன்களும்வெள்ளிக்கிழமை இரவு சென்னை புறப்பட்டுச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டு 75 நாட்கள் ஆகியுள்ள நிலையில், காட்டுக்குள்வீரப்பனுடன், கோபால், நெடுமாறன் குழுவினர் நடத்தி வரும் பேச்சு நிறைவடையும்நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. திங்கள்கிழமை மாலை வாக்கில் ராஜ்குமார்விடுதலையாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு பர்வதம்மாவும் அவரது மகன்களும்சென்னை புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. காட்டிலிருந்து ராஜ்குமாருடன், தூதுக்குழுவினர் சென்னை வந்ததும், அவர்கள் ராஜ்குமாரை வரவேற்க இருக்க வேண்டும்என்பதால் சென்னைக்கு வரவழைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.
இருப்பினும் பர்வதம்மா சென்னை சென்றிருப்பதை அரசுத் தரப்போ, அவரதுகுடும்பத்தினரோ இதுவரை உறுதி செய்யவில்லை.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications