ஆந்திரா, ஒரிஸ்ஸாவை புயல் தாக்கும் அபாயம்
புவனேஸ்வர்:
வங்காள விரிகுடாவில் புயல் சின்னம் உருவாகியுள்ளது. இதனால், ஆந்திா, ஒரிஸ்ஸாவில் புயல் வீசும் அபாயம்ஏற்பட்டுள்ளது.
திங்கள்கிழமை காலை மசூலிப்பட்டிணத்திலிருந்து 500 கி.மீ. கிழக்காக இந்த புயல் சின்னம் மையம் கொண்டிருந்தது. இதுதொடர்ந்து ஆந்திர, ஒரிஸ்ஸா கடற்கரைப் பகுதி நோக்கி நகர்ந்து வருகிறது.
அடுத்த 48 மணி நேரத்தில் இந்த இரு மாநிலங்களின் கடற்கரைப் பகுதிகளிலும், உள் பகுதிகளிலும் பலத்த புயல் காற்றுவீசக்கூடும். காற்றின் வேகம் 70-75 கி.மீ. வரை இருக்கும்.
இதையடுத்து ஆந்திராவிலும் ஒரிஸ்ஸாவிலும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயலின் வேகத்தைக் குறிக்கும்இரண்டாம் எண் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
கடலில் அலைகள் மிகக் கடுமையாக இருப்பதால் கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீனவர்களை இரு மாநில அரசுகளும்எச்சரித்துள்ளன.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உயர் அதிகாரிகளுடன் புயல் நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
ஒரிஸ்ஸாவிலும் தேவையான முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒரிஸ்ஸாவை கடந்த சில மாதங்களுக்கு முன்தாக்கிய புயலில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அந்த பாதிப்பில் இருந்தே அம் மாநிலம்இன்னும் முழுமையாக மீளவில்லை.
இந் நிலையில் மீண்டும் புயல் சின்னம் உருவாகியிருப்பது மக்களை கலவரப்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications