தேனி அருகே காட்டுக்குள் துப்பாகிச் சூடு - 2 பேர் பலி
மதுரை:
தேனி அருகே சந்தன மரக்கடத்தல் கும்பல் மீது வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் இரண்டு பேர்பலியானார்கள்.
தேனி மாவட்டம் கூடலூர் அருகே வனத்துறைக்கு சொந்தமான அடர்ந்த காடுகள் உள்ளன. இங்கு உள்ள வண்ணாத்திப்பாறைஅருகே பந்தல் ராஜா ஓடை என்கிற இடம் இருக்கிறது.
அந்தப்பகுதியில் ஏராளமான சந்தன மரங்கள் வளர்ந்துள்ளன. இந்த சந்தன மரங்களை ஒரு கும்பல் வெட்டிக் கடத்திவந்தது.வனத்துறை அதிகாரிகளும் முழு பலத்தோடு கடத்தல் கும்பலை தடுக்க முயன்று வருகின்றனர்.
நேற்று பந்தல் ராஜா ஓடை பகுதியில் அதிகாரிகள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது ஒரு கும்பல் கோடாரியால் சந்தனமரங்களை வெட்டிக்கொண்டிருந்தது. இதைக்கண்டதும் அதிகாரிகள் அந்தக் கும்பலை சுற்றி வளைத்தனர்.
கடத்தல்காரர்கள் அதிகாரிகளை ஆயுதங்களால் தாக்கினர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் கடத்தல் கும்பல் மீதுதுப்பாக்கியால் சுட்டனர்.
இதில் சந்தன மரக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த இரண்டு பேர் மீது துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. அவர்கள் சுருண்டு விழுந்துஅதே இடத்தில் இறந்தனர்.
அவர்கள் குறித்து வனத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பலியானவர்கள் ராமர், உடையான் இருவர் என்றும் இவர்கள்கூடலூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications