இஸ்ரேல்: தொடரும் வன்முறை... தடுமாறுகிறது அமைதிப் பேச்சுவார்த்தை
ஷாரம் இல் - ஷேக் (எகிப்து):
இஸ்ரேலிய, பாலஸ்தீனிய தலைவர்கள் திங்கள்கிழமையன்று தொடங்கிய அமைதிப்பேச்சுவார்த்தையில் சிறு முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளனர்.
பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலிய ராணுவத்துக்கும் இடையே கடந்த 15 நாட்களாக நடந்த தாக்குதலில்101 பேர் கொல்லப்பட்டனர். இதில் 7 பேர் அரபு நாட்டைச் சேர்ந்தவர்கள்.
பாலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேலியர்களுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையில்ஈடுபட்டிருக்கும் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் முயற்சிக்கு ஆதரவு இருந்தாலும் இருநாடுகளும் அமைதிக்குத் திரும்புவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.
எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் அளித்த மதிய விருந்தில் பங்கேற்ற பாலஸ்தீன தலைவர் யாசர்அராபத்தும். இஸ்ரேலிய பிரதமர் எஹோத் பாரக்கும் ஒருவரை ஒருவர் பார்க்காமல், பேசிக்கொள்ளாமல் விருந்தில் சாப்பிட்டு விட்டுச் சென்றார்கள் என அரசு அதிகாரிகள் கூறினர்.
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக நடந்த அரை மணி நேர துவக்க உரை நிகழ்ச்சியில் இருதலைவர்களும் எதுவும் பேசவில்லை.
பாலஸ்தீனிய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் யாசக் அபெட் ராபோ, இதுவரை எந்தவிதமானமுன்னேற்றமும் ஏற்படவில்லை. திங்கள்கிழமை இரவும் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படாதுஎன எண்ணுகிறேன் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இரு நாட்டுத் தலைவர்களும் இப்படி இருக்கையில் மேற்கு கரையிலும், காஜாவிலும் புதியவன்முறைகள் தலை தூக்கி உள்ளன. அரபு நாட்டவர்களும், இஸ்ரேலியர்களும் அமைதிப்பேச்சுவார்த்தை குறித்து குறை கூறிவருகிறார்கள்.
காஜாவில் இரண்டு நாள் அமைதிக்குப்பின் மீண்டும் வன்முறை துவங்கியது. இதில் பாலஸ்தீனபோலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். மேற்கு கடற்கரை பகுதியில் 39 பாலஸ்தீனியர்களும்,இரண்டு இஸ்ரேலிய ராணுவத்தினரும் காமடைந்தனர் என மருத்துமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வன்முறை இஸ்ரேலிய, பாலஸ்தீனத்திற்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைக்குமுட்டுக்கட்டையை ஏற்படுத்தி உள்ளது.
இன்னும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தேவையான முயற்சியில் நாங்கள்ஈடுபட்டிருக்கிறோம்.பேச்சு வார்த்ததையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான்நாங்கள் அனைவரும் இங்கு வந்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம் என இஸ்ரேலியவெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாள்ர க்ரெளவ்லே கூறுகையில், இன்னும்செவ்வாயக்கிழமை நண்பகல் வரை கிளிண்டன் தங்கியிருப்பார். அதன் பின் அவர் தங்க இயலாது.ஏனென்றால், அவர் சமீபத்தில் 17 அமெரிக்க கடற்படை வீரர்கள் கொல்லபட்டது தொடர்பாக நடக்கஇருக்கும் அஞ்சலி நிகழ்ச்சியில் அவர் பங்கெடுக்கவிருக்கிறார் என்றார்.
இருண்ட முகத்துடனும், சோகம் ததும்பிய முகத்துடன் இருந்த பராக், அராபத்திடம் பேச்யகிளின்டன், நாம் வருத்தம், வேதனை, ஒருவர் மேல் ஒருவர் குற்றம் காண்பது போன்றஅனைத்தையும் விட்டுவிட்டு எதிர்கால நலன் குறித்து சிந்தித்துச் செயல்பட வேண்டுமென்றார்.
கொரில்லாக்கள் பிடியில் இஸ்ரேலிய ராணுவ அதிகாரி:
இந்நிலையில் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா இஸ்லாமிய கொரில்லா இயக்கத்தினர் இஸ்ரேல் ராணுவகர்னல் ஒருவரை பிடித்துச் சென்றனர். இவர் லெபானானுக்கு வந்த முதல் அவரை நாங்கள் கண்காணித்து வந்தோம், அவர் எங்கள்இயக்கத்துக்குள் ஊடுறுவ முயன்றதால் அவரை பிடித்து வைத்துக் கொண்டுள்ளோம் என அந்தஇயக்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்:
வன்முறை நடந்து வரும் பகுதியில் பணி புரிந்து வந்த 4 இந்திய பொறியாளர்கள் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, டெல் அவ்விவில் இருக்கும் இந்திய தூதரகத்தில் ஒப்டைக்கப்பட்டதாகபாலஸ்தீன தேசிய கழகத்தினர் தெரிவித்தனர்.
மேலும் அங்கு வாழும் இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்கள்தெரிவித்தனர்.
ஐ.ஏ.என்.எஸ் மற்றும் யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications