ஜெயிடமிருந்து அதிமுகவை விடுவிப்போம்: ஆர்.எம்.வீ.
சேலம்:
ஊழல் குற்றச்சாட்டில் ஜெயலலிதா மீதான வழக்கு நிரூபிக்கப்பட்டுள்ளதால், அ.தி.மு.க.,வுடன்கூட்டணி வைத்துக் கொள்வது பற்றி கட்சிகள் தங்களது நிலையை விளக்க வேண்டும் எனஎம்.ஜி.ஆர் கழகத்தின் தலைவர் ஆர்.எம். வீரப்பன் தெரிவித்தார்.
சேலத்தில் எம்.ஜி.ஆர்.,கழகத்தின் தலைவர் ஆர்.எம். வீரப்பன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்கூறியதாவது:
அ.தி.மு.க.,பொதுச் செயலர் ஜெயலலிதா மீது ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு விட்டது. இதுநீதித்துறைக்கும் மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும். இது முடிவல்ல, மேல் முறையீடு செய்வோம்என பலர் கூறி வருகின்றனர்.
அடுத்து வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காமல் போய்விடும் என இவர்கள் கருதி,ஜெயலலிதாவின் ஏஜெண்டுகளாகச் செயல் பட்டு வருகின்றனர். மதவாத எதிர்ப்பு என்ற போலிவாதத்தைக் கூறி மக்களைத் திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.
மக்களும், நீதிமன்றமும் தீர்ப்புச் சொல்லும் எனக் கூறி வந்தவர்கள் இப்போது என்னசொல்கின்றனர்?. கடந்த 1996ம் ஆண்டு மக்கள் ஜெயலலிதாவைப் புறக்கணித்து தீர்ப்புக் கூறிவிட்டனர். நீதிமன்றமும் குற்றச்சாட்டில் தீர்ப்பளித்து விட்டது. இனி வரும் தர்தலிலும் அவர்புறக்கணிக்கப்படுவார்.
இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட பின்னரும் அவரைக் கட்சியில் தொடர்ந்து நீடிக்கச் செய்வதுகுறித்து எம்.ஜி.ஆர் உருவாக்கிய அ.தி.மு.க. தொண்டர்கள் பரிசீலனை செய்ய வேண்டும்.ஜெயலலிதாவிடமிருந்து அ.தி.மு.கவை அவர்கள் விடுவிக்க வேண்டும். அவர் தொடர்ந்துநீடித்தால், இவரது தலைமையை தொண்டர்கள் ஏற்காமல் எம்.ஜி.ஆர் கழகத்திற்குத் திரும்பவேண்டும்.
தொடர்ந்து இக்கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்வது பற்றி மறு பரிசீலனை செய்ய வேண்டும்.அப்பீலுக்குச் செல்வதால் இன்னும் குற்றம் இறுதியாக நிரூபிக்கப்படவில்லை என இவர்கள் பேசிவருவது கேலிக் கூத்தாக உள்ளது என்றார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications