ஆட்சிக்கு வந்தால் திமுகவை அழிப்பேன் .. ஜெ.சூளுரை
சென்னை:
2001-ல் ஆட்சியை கைப்பற்றுவேன். அப்புறம் 2 ஆண்டுகளில் திமுக என்றொரு கட்சிஇருக்குமா என்ற நிலையை ஏற்படுத்துவேன் என்று அதிமுக 29-வது ஆண்டு தொடக்கவிழாவில் ஜெயலலிதா சூளுரைத்தார்.
அதிமுக 29வது தொடக்க விழா நிகழ்ச்சிகள் சென்னையில் அக்கட்சி தலைமைஅலுவலகத்தில் செவ்வாய் கிழமை நடைபெற்றது. பொதுச்செயலாளர் ஜெயலலிதாகட்சிக் கொடியை ஏற்றி வைத்து, அரசியல் காரணங்களுக்காக படுகொலைசெய்யப்பட்ட அதிமுக தொண்டர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி அளித்தார்.
சிறப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 52 ஜோடிகளுக்கு இலவசதிருமணத்தையும் அவர் நடத்தி வைத்தார்.
பின்னர் கட்சியினர் மத்தியில் ஜெயலலிதா பேசியதாவது:
எதிரிகள் திகைக்கும் அளவுக்கு இங்கே தொண்டர்கள் திரண்டு வந்துள்ளீர்கள். சிலசதிகாரர்கள் செய்த சதியின் காரணமாக கிடைத்த தீர்ப்பினால் அதிமுக அழிந்து விடும்என்று நினைத்தவர்களுக்கு இது அதிர்ச்சி வைத்தியமாக அமையும்.
எத்தனை ஆயிரம் கருணாநிதிகள் வந்தாலும், எத்தனை ஆயிரம் சதிவேலைகளில்ஈடுபட்டாலும் கவலையில்லை. நமக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது. நமதுவெற்றியை யாரும் தட்டிப் பறிக்க முடியாது.
எத்தனை ஆயிரம் சோதனைகள், வேதனைகள் வந்தாலும் என்னோடு இருக்கும்தொண்டர்கள் தான் எனக்கு கிடைத்த பாக்கியம். கடந்த 5 ஆண்டுகளாக எத்தனையோதுயரங்களை அனுபவித்தேன். அதனால் வெளிநாட்டுக்கு ஓடி விடுவேன் என்று சிலர்கனவு கண்டார்கள். அது நடக்கவில்லை.
நான் எப்போதும் உங்களுடன் தான் இருப்பேன். கருணாநிதிக்கு சிம்மசொப்பணமாகஇருப்பேன். கருணாநிதியை ஓய்க்கும் வரை ஓயமாட்டேன். 2001ல் எம்ஜிஆர்ஆட்சியை மீண்டும் கொண்டு வருவேன். அந்த ஆட்சி மலர்ந்த 2 ஆண்டுகளில் திமுகஎன்றொரு கட்சி இருக்கிறதா என்று மக்கள் கேட்கும் வகையில் செயல்படுத்திகாட்டுவேன் என்றார் அவர்.
கட்சியின் மிக முக்கியமான இந்த விழாவில் அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினராகஜெயலலிதாவால் அதிரடியாக நியமிக்கப்பட்ட சசிகலா கலந்து கொள்ளவில்லை.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications