விஷ வாயுவினால் இறந்தவர்களின் உறவினர்கள் போராட்டம்
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பொட்டனேரியில் விஷ வாயு தாக்கிப் பலியான 3 பேருடையஉறவினர்கள் நஷ்ட ஈடு வழங்கக் கோரி பிணத்தைப் பெற மறுத்து சாலை மறியலில்ஈடுபட்டனர்.
மேச்சேரி அருகே உள்ள பொட்டனேரியில் கடந்த அக்டோபர் 16ம் தேதி சிஸ்கால் என்றதேனிரும்புத் தொழிற்சாலையில் பர்னசைத் திறந்த மூன்று தொழிலாளர்கள் விஷ வாயுதாக்கி இறந்தனர்.
இந்த விபத்தில் இறந்த மூன்று பேரின் சடலங்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் மூன்றுபேரின் உடல்களையும் அவரது உறவினர்கள் எடுத்துச் செல்ல முடிவானது.
அப்போது திடீரென தொழிலாளர்கள் உட்பட 200 பேர் பிணத்தை பெற மறுத்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதனையொட்டி அங்கு பதட்ட நிலை ஏற்பட்டது. போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும்தொழிற்சாலை அதிகாரிகள் அங்கு விரைந்து சமாதானப்படுத்தினர்.
இறந்தோரின் உறவினர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும்ஏற்கனவே அளிக்கப்பட்ட நிவாரணத் தொகையான 1.85 லட்ச ரூபாயுடன் கூடுதலாக 2லட்ச ரூபாய் நிதி அளிக்க வேண்டும் எனக் கோரினர்.
தொழிற்சாலை நிர்வாகம் 1.85 லட்சத்துடன் 15 ஆயிரம் சேர்த்து இரண்டு லட்சமாகவழங்குவதாக அறிவித்தது. ஆனால் இதை ஏற்க தொழிலாளர்கள் மறுத்து சாலைமறியலைக் கைவிட மறுத்தனர்.
இதையடுத்து, இறந்தவரின் குடும்பத்தினரின் வாரிசுகளுக்குத் தொழிற்சாலையில் வேலைபோட்டுத் தருவதாகவும், கூடுதலான நிவாரணத் தொகை குறித்து நிர்வாகக் குழுக்கூட்டத்தில் அனுமதி கோரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டு மூவரின் உடலையும் உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications