ஐக்கிய நாடுகள் சபையில் வைகோ
ஐக்கியநாடுகள்:
புத்தாயிரம் ஆண்டில் சர்வதேச அளவில் ஏற்படக்கூடிய சவால்களைசமாளிக்க ஐக்கிய நாடுகள் சபையில் சீர்திருத்தம் கொண்டு வரப்படவேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த புத்தாயிரம் ஆண்டுசிறப்பு மாநாட்டில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோபேசியுள்ளார்.
இந்தியாவின் பிரதிநிதியாக ஐக்கிய நாடுகள் பொதுசபைக் கூட்டத்தில்ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டுள்ளார்.வைகோ பேசுகையில், புத்தாயிரம் ஆண்டு மற்றும் புது நூற்றாண்டுதுவக்கத்தில் ஐ.நா.சபை கடுமையான நெருக்கடிகளை சந்திக்கவேண்டியுள்ளது. எனவே ஐ.நா. செயல்பாடுகளில் ஒரூங்கிணைந்தசீர்திருத்தம் அவசியம். முக்கியமாக பொருளாதாரத்துறையில்சீர்திருத்தம் அவசியமானதாகும்.
ஐ.நா. சார்பில் அமைதிப்பணியை மேற்கொள்ளும் போது, அதற்குஆகக் கூடிய செலவுகளை ஐ.நா சபையும், அதில் சம்பந்தப்படும்நாடுகளும் பகிர்ந்து கொள்ளாமல் இழுத்தடிப்பது கூடாது.
அமைதிப் பணிக்காகச் செல்லும் படை வீரர்களுக்காக ஆகும்செலவுகள் மற்றும் கருவிகளுக்கான செலவுகள்தாமதப்படுத்தப்படாமல் கொடுக்கப்பட வேண்டும். இதற்கு ஐ.நா.சபையில் உள்ள அனைத்து உறுப்பு நாடுகளும் உறுதி மொழிஎடுத்துக் கொள்ள வேண்டும்.
ஐ.நா. வின் உறுப்பு நாடுகள் தங்கள் பொறுப்பை உணர்ந்துசெயல்பட்டு, நிபந்தனையற்ற ஆதரவு வழங்கினால் பலசீர்திருந்தங்களை செயல்படுத்தலாம்.
பல்வேறு நாடுகளிலில் அமைதிப் பணியில் ஈடுபட்டதற்காகஐ.நா.வுக்கு இரண்டு கோடி டாலர்கள் வரை பணம் வரவேண்டியிருக்கிறது. அவை ஒழுங்காக ஒப்படைக்கப்பட்டால்மட்டுமே அமைதிப்பணியில் ஈடுபடும் நாடுகள் பயன்பெறும்.
இந்தியா உள்ளிட்ட 19 நாடுகளுக்கு ஐ.நா.விடமிருந்து தலா இரண்டுகோடி டாலர்கள் வர வேண்டியிருக்கிறது. 5 ஆண்டுகளுக்கு முன்புசோமாலியா,கம்போடியா நாடுகளுக்கு அமைதிப் பணிமேற்கொண்ட பிற நாட்டு ராணுவங்களுக்குக் கூட செலவினத்திற்கானபணம் வழங்கப்படவில்லை. சியாராலியோன் பிரச்னையிலும் இதேநிலை தான்..
ஐ.நா. சபை தொடர்ந்து அமைதிப்பணியை மேற்கொள்ளவேண்டுமென்றால் பொருளாதார நிலையில் வலுவாக இருக்கவேண்டியது அவசியமானதாகும். இதற்கு ஒருங்கிணைந்தபொருளாதார திட்டம் அமைக்கப்படாமல் போனால் இந்த சர்வதேசஅமைப்பு திவாலாகிப் போகும் நிலைதான் ஏற்படும்.
ஐ.நா. அமைப்பை சீரமைக்க பொதுச்செயலாளர் கோபி அன்னான்முன் வைத்துள்ள பரிந்துரைகள் வரவேற்கத்தக்கவை என வைகோபேசினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications