அமைச்சரவையை விரிவுபடுத்தினார் சந்திரிகா
கொழும்பு:
இலங்கை அமைச்சரவை பதவியேற்றுக் கொண்ட நாளிலேயே விரிவாக்கம்செய்யப்பட்டது. மேலும் 2 அமைச்சர்கள் வியாழக்கிழமை பதவியேற்றுக்கொண்டனர்.
இலங்கை நாடாளுமன்றத்துக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் அதிபர் சந்திரிகாகுமாரதுங்காவின் மக்கள் கூட்டணி வெற்றி பெற்றது. அருதிப் பெரும்பான்மை பலம்இல்லாவிட்டாலும், தோழமைக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
எப்போதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் 44 பேர் கொண்டஅமைச்சரவை வியாழக்கிழமை பதவியேற்றது. மக்கள் கூட்டணி தவிர அரசுக்குஆதரவு கொடுத்துள்ள கட்சிகளுக்கும் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம்அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜம்போ அமைச்சரவைக்கு முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சித்தலைவர் ரனில் விக்ரசிங்கே கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இவ்வளவு பெரியஅமைச்சரவை இலங்கைக்குத் தேவையில்லை. செலவுதான் கூடுதலாகும் என்று அவர்கூறியுள்ளார்.
வளர்ச்சித் துறையில் வடக்குப் பகுதிக்கு என்று ஒரு அமைச்சரும், கிழக்குப் பகுதிக்குஎன்று ஒரு அமைச்சரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், பெரும் பிரச்சினைஏற்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இது தவிர வேறு பல எதிர்க்கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில்,கூட்டணிக் கட்சிகளின் வெறுப்பைச் சம்பாதிக்க விரும்பாமல் மேலும் இருவருக்குஅமைச்சரவையில் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா இடம் கொடுத்துள்ளார்.
புதிய அமைச்சரவை வியாழக்கிழமை காலையில்தான் பதவியேற்றுக் கொண்டது.அன்றைய தினம் மாலையிலேயே மேலும் இருவர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.
இப்போது இலங்கை அமைச்சரவையின் பலம் 46 ஆக உயர்ந்துள்ளது. இதனால்,அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.ஒரே துறையை வேறு வேறு பெயர்களில் அமைச்சர்கள் நிர்வகிக்க வேண்டிய நிலைஅங்கு உருவாகியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்காவின் தந்தைரெக்கி ரணதுங்காவுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்குஉணவு மற்றும் விற்பனைத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் எஸ்.பி. திஸநாயகே என்பவரும் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளப்பட்டு அவருக்கு ஏழை மக்கள் நல்வாழ்வு மற்றும் கிராமப்புற வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக நாடாளுமன்ற விவகாரத் துறையும்ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே மஹிபாலா ஹீராத் என்பவருக்கு கிராமப்புற தொழில் வளர்ச்சி என்றதுறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கும் திஸநாயகேவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைக்கும்எந்த வேறுபாடும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1994-ம் ஆண்டு முதன்முறையாக ஆட்சிக்கு வந்தபோது அமைச்சரவையில்அமைச்சர்களின் எண்ணிக்கையை 18 ஆகக் குறைப்பேன் என்று சந்திரிகாகுமாரதுங்கா கூறியிருந்தார்.
ஆனால், இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு தனதுஅமைச்சரவையின் பலத்தைக் குறைக்காமல் 46 ஆக பெரிதாக்கியிருப்பதுசந்திரிகாவுக்கு பெருத்த எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications