கோவையில் பெருகி வரும் சாப்ட்வேர் நிறுவனங்கள்
கோவை:
கோவையில் தகவல் தொழில்நுட்ப புரட்சி வளர்ச்சி பெற உகந்த சூழ்நிலை நிலவி வருகிறது.இதற்கான அடிப்படை வசதிகள் கோவையில் உள்ளன என மத்திய சாஃப்ட்வேர் தொழில்நுட்பபூங்கா நிர்வாக இயக்குனர் எஸ்.என். ஜின்டால் கூறியுள்ளார்.
கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்த கருத்தரங்கைத் துவக்கி வைத்து அவர்கூறுகையில்,
தமிழகத்தில் சாஃப்ட்வேர் தொழில் வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. கோவையில் இத்துறை மிகவேகமாகன வளர்ச்சி பெறுவதற்கான சூழ்நிலை நிலவி வருகிறது. இங்கு தேவையான அடிப்படைகட்டமைப்பு வசதிகள் உள்ளன. ஜவுளி, ஆட்டோ ஸ்பேர்ஸ், பம்ப் தொழிற்சாலைகளுக்குஅடுத்தபடியாக சாஃப்ட்வேர் தொழில்நுட்பம் இங்கு வளர்ச்சி பெறும்.
சாஃப்ட்வேர் தொழில்நுட்ப வல்லுனர்கள் இங்கு தான் அதிகமாக உருவாகி வருகின்றனர். ஓரிருவெளிநாட்டுக் கம்பெனிகள் இங்கு இருந்தால், பல சிறு தகவல் தொழில்நுட்ப கம்பெனிகள் உருவாகஏதுவாக இருக்கும்.
இது தவிர கோவையில் வி.எஸ்.என்.எல். மற்றும் சாஃப்ட்வேர் தொழில்நுட்ப பூங்கா ஆகியவைசெயல்பட்டு வருகின்றன. தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி பெறுவதற்கான உகந்த சூழ்நிலை நலவிவருவதால், இது ஒரு சாஃப்ட்வேர் வர்த்தக மையமாக மாறும்.
தமிழகத்திலேயே அதிகமான இன்ஜினியரிங் கல்லூரிகள் கோவையில் தான் செயல்பட்டுவருகின்றன. இந்தக் கல்லூரிகளின் தகவல் தொழில்நுட்பப் பட்டப் படிப்புகள்அதிகரிக்கப்பட்டுள்ளது வரவேற்கக் கூடியது என்றார்.
விழாவில் பேசிய தமிழ்வாடு சாஃப்ட்வேர் பூங்கா இயக்குனர் ராஜலட்சுமி,
கோவையிலிருந்து சாஃப்ட்வேர் ஏற்றுமதி ரூ. 5 கோடியிலிருந்து ரூ.22 கோடியாக உயர்ந்துள்ளது.இங்குள்ள கம்பெனிகள் 10 லிருந்து 60 ஆக உயர்ந்துள்ளன.
கல்வி நிறுவனங்களுடன் தகவல் தொழில்நுட்பக் கம்பெனிகள் இணைந்து செயல்படுவதன் மூலம்ஆய்வுகளை வலுப்படுத்த முடியும். திறமைகளை அதிகரிக்க முடியும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications