கோவை டாக்டர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை
கோவை:
கோவையில் டாக்டர் வீட்டில் 100 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
இது பற்றி கூறப்படுவதாவது:
கோவை சாய்பாபா காலனியில் நான்காவது குறுக்குத் தெருவில் வசிப்பவர் சண்கத்(70). இவரது மனைவி சரஸ்வதி (65). இருவரும் டாக்டர்களாகத் தொழில் செய்துவருகின்றனர்.
மாடி வீட்டில் கீழ் பகுதியில் சண்கத் அவரது மனைவியும், மேல் மாடியில் சண்கத்தின்மகன் ரவிகாந்த், தனது குடும்பத்தினருடனும் வசித்து வருகின்றனர்.
ரவிகாந்த்தும் அவரது மனைவி ராஜலட்சுமியும் கோவையில் உள்ள தனியார்மருத்துவமனையில் டாக்டர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.
இந் நிலையில் வெள்ளிக்கிழமை இரு இரு குடும்பத்தினரும் தூங்கச் சென்றனர்.மறுநாள் அதிகாலை மூன்று மணிக்கு இவர்களது வீட்டுக்குள் முகமூடி அணிந்த 5 பேர்புகுந்தனர்.
சண்கத் மற்றும் அவரது மனைவி சரஸ்வதி இருவரையும் கத்தியைக் காட்டி மிரட்டினர்.கூச்சல் போட்டால் கொலை செய்துவடுவதாகக் கூறி, நகைகள் எங்கே என்று கேட்டுமிரட்டினர்.
நகைகள் பீரோவில் இருப்பதாகக் கூறிய பிறகு கொள்ளையர்கள் பீரோவைத் திறந்துஅதில் இருந்த வைர நெக்லஸ் உள்பட 45 சவரன் நகைகளை எடுத்துக் கொண்டனர்.
இதற்கிடையே, கீழ் தளத்தில் ஏதோ சத்தம் கேட்டு ரவிகாந்த்தும் அவரது மனைவிராஜலட்சுமியும் கீழே இறங்கி வந்தனர். அவர்களையும் கொள்ளையர்கள் கத்தியைக்காட்டி மிரட்டினர்.
இருவரையும் மேல் மாடிக்கு அழைத்துச் சென்று நகைகளைக் கொடுக்கும்படிமிரட்டினர். கொடுக்கவில்லை என்றால் குழந்தைகளைக் கொன்றுவிடுவதாகமிரட்டினர். தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை அவர்கள் கட்டிப் போட்டனர்.
பின்னர் பீரோவில் இருந்த 50 சவரன் நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பாத்திரங்கள்ஆகியவற்றைக் கொள்ளையடித்துக் கொண்டு ஆட்டோவில் ஏறி தப்பிச்சென்றுவிட்டனர்.
கோவை ரயில் நிலையம் வரை சென்று அங்கிருந்து ரயிலில் அவர்கள்தப்பிச்சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படைஅமைக்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications