புதிய தூதரை அனுப்ப கர்நாடகம் தயங்காது: கிருஷ்ணா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்காக தேவைப்பட்டால், கர்நாடக அரசு தனது தூதரைஅனுப்பத் தயங்காது என்று மாநில முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.

கர்நாடக சட்ட மேலவையில், புதன்கிழமை நடந்த விவாதத்தின்போது எதிர்க்கட்சிஉறுப்பின்களின் கேள்விக்குப் பதிலளிக்கையில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேரவை விதி 330ன் கீழ் ராஜ்குமார் கடத்தல் குறித்த விவாதம் கர்நாடக சட்டமேலவையில் செவ்வாய்க்கிழமை துவங்கியது.4 மணி நேர நீண்ட விவாதத்திற்குப்பதிலளித்து கிருஷ்ணா பேசியதாவது:

கர்நாடகத்தின் தரப்பில் புதிய தூதர் அனுப்பியாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால்அதைச் செய்ய எங்களது அரசு தயங்காது. ராஜ்குமாரை மீட்பது தொடர்பாக மைசூரைச்சேர்ந்த வழக்கறிஞர் வேணுகோபால் தயாராக இருந்தார். ஆனால் அவரைச் சந்திக்கவீரப்பன் மறுத்து விட்டான்.

பிரச்சினையின் முக்கியத்துவத்தை உணர்ந்து எங்களுடன் ஒத்துழைத்து வரும்எதிர்க்கட்சியினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சமீபத்தில் காட்டுக்குச் சென்றுவந்த அரசுத் தூதர்கள் கூற்றின்படி நடிகர் ராஜ்குமார் நலத்துடன் உள்ளார்.

ராஜ்குமார் விரைவில் நலமுடன் திரும்புவார். அதற்கான முயறசிகளை தமிழகஅரசுடன் இணைந்து, கர்நாடக அரசு எடுத்து வருகிறது. இந்த விவகாரம் மூலம்கர்நாடக அரசு பல பாடங்களைக் கற்றுக் கொண்டுள்ளது. இன்னும் கூட கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.

நாகப்பா தப்பி வந்தது, ராஜ்குமார் விடுதலையில் பின்னடைவை ஏற்படுத்தி விட்டது.அவர் மட்டும் தப்பி வராமல் இருந்திருந்தால், இன்னேநரம் ராஜ்குமார் விடுதலையாகிஇருப்பார் என்றார் கிருஷ்ணா.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+