"தமிழர் நலனுக்காகவே ராஜ்குமார் கடத்தப்பட்டார்
சேலம்:
தமிழர் நலனுக்காகவும், இரு மாநிலங்களுக்கு இடையே இருந்து வரும்பிரச்னைகளுக்குத் தீர்வு காணவே வீரப்பன் மூலம் ராஜ்குமார் கடத்தப்பட்டுள்ளார் எனதமிழ்த் தீவிரவாதிகளின் காட்பாதர் என அழைக்கப்படும் புலவர் கலியபெருமாள்கூறியுள்ளார்.
சேலம் அருகே உள்ள பென்னாடத்தில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்கலியபெருமாள். தமிழர் விடுதலைப் படை என்ற நக்சலைட் பிரிவைத் துவக்கியவர்.இன்றைய தமிழ்த் தீவிரவாதிகளின் காட்பாதர் எனப்படுபவர்.
சேலத்தில் கலியபெருமாள் செய்தியாளர்களிடம் பேசுகையில், வீரப்பனும் தமிழர்விடுதலைப் படையினரும் அமைதியான முறையிலேயே இணைந்து தமிழர் நலன்காக்க காட்டுக்குள் இருந்தபடியே போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வீரப்பன் விடுத்துள்ள நியாயமான கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றவேண்டும். தடா கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். தடா சட்டம் வாபஸ்ஆகி பல ஆண்டுகளாகி விட்டது. இந்த சட்டம் காலாவதியான பிறகும், பலரைஇன்னும் சிறையில் வைத்திருப்பது எவ்விதத்திலும் நியாயம் இல்லை.
இதை விட்டு விட்டு வீரப்பனைப் பிடிப்பதற்காக தடா கைதிகளை விடுதலைசெய்யாமல் வைத்திருப்பதாகக் கூறுவது அபத்தமானது. இவர்களை விடுவிக்கவும்,வீரப்பன் விடுத்துள்ள கோரிக்கைகளைத் தீர்க்கவும் போதிய அதிகாரம் மத்தியஅரசிடமே உள்ளது. மாநில அரசுகளிடம் எவ்வித அதிகாரமும் இல்லை.
மத்திய அரசோ, எவ்விதத்திலும், இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிமேற்கொண்டதாகத் தெரியவில்லை. தமிழர்களின் நலனுக்காக விடுக்கப்பட்டுள்ளஇந்தக் கோரிக்கையில் தமிழர் விடுதலைப் படையின் தலைவர் மாறன் சரியானபாதையில் போராட்டம் நடத்தி வருகிறார்.
வீரப்பனைக் கொள்ளையன் எனக் கூறி வருகின்றனர். உண்மையில்கொள்ளையடிப்பவர்கள் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தான். இவர்கள்மறைமுகக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். தவறான முறையில் இதற்குவீரப்பனின் பெயரைப் பயன்படுத்தி வருகின்றனர் என்றார் கலியபெருமாள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications