55 வயதுப் பெண்ணின் வயிற்றில் 14 ஆண்டுகளாக இருந்த சிசு

Subscribe to Oneindia Tamil

கல்கத்தா:

கல்கத்தாவைச் சேர்ந்த 55 வயதுப் பெண்ணின் வயிற்றில் கடந்த 14 ஆண்டுகளாகஇறந்த நிலையில் இருந்த சிசு அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

இந்திய மருத்துவ வரலாற்றில் மிகவும் அரிதாக இது கூறப்படுகிறது. கல்கத்தாவைச்சேர்ந்தவர் சரளா பைத்யா. இவருக்கு வயிறு வீங்கிய நிலையில் காணப்பட்டது.இதையடுத்து டாக்டர்களிடம் சோதனை செய்தார். அப்போது வயிற்றில் கட்டிஇருக்கலாம் என்று கருதப்பட்டது.

இதையடுத்து, அக்டோபர் 21-ம் தேதி பேலூர் ஸ்ரமாஜிபி ஸ்வத்ஸ்யா பிரகல்பா சமிதிமருத்துவமனையில் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அப்போதுதான்அவரது வயிற்றில் இருந்தது கட்டி அல்ல, 7 மாதம் நிறைந்த, இறந்த நிலையில் இருந்தசிசு என்று தெரிய வந்தது.

14 ஆண்டுகளுக்கு முன்பு சரளா கருத்தரித்துள்ளார். ஆனால் கருப்பையில் கருதங்காமல், வயிற்றிலுள்ள ஒரு வெற்றிடத்தில் தங்கியிருந்தது. இதனால், கரு 7 மாதம்வரை வளர்ந்த நிலையில் அப்படியே இறந்து விட்டது. கட்டியாகவும் மாறி விட்டது.

மருத்துவ வரலாற்றிலேயே இதுபோன்று ஒரு சிசு வயிற்றில் வளர்ந்து, இறந்த நிலையில்14 ஆண்டுகள் இருந்தது அரிதாக கூறப்படுகிறது. இபோன்ற சம்பவம் உலகில் வேறுஎங்காவது நடந்திருக்கிறதா என்பதை இன்டர்நெட் மூலம் ஆராய்ந்துகொண்டிருக்கிறோம் என்று மருத்துவமனை செயலாளர் ஏ.கே.சாஹா கூறினார்.

ஐ.ஏ.என்.எஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+