மியான்மர் ராணுவ வீரர்கள் சுட்டு 5 இந்திய வீரர்கள் பலி
குவஹாத்தி:
இந்திய, மியான்மர் எல்லையில், மியான்மர் ராணுவ வீரர்கள் நடத்திய அத்துமீறியதாக்குதலில் ஐந்து இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். 6பேர் படுகாயமடைந்தனர்.
வியாழக்கிழமை இந்த சம்பவம் நடந்தது. மியான்மர் ராணுவத்தின் பெரும் படைப்பிரிவு, வியாழக்கிழமை, நாகலாந்து மாநில எல்லையில் உள்ள லோங்வா கிராமத்தில்,அஸ்ஸாம் ரைபிள்ஸ் பிரிவின் முகாம் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. சரமாரியாகநடந்த இந்தத் தாக்குதலில் ஐந்து இந்திய வீரர்கள் அங்கேயே கொல்லப்பட்டனர். 6 பேர்படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து நாகாலாந்து போலீஸ் டி.ஜி.பி. லூகேய் சாமா கூறுகையில், இந்தியவீரர்களைத் தீவிரவாதிகள் என தவறாக நினைத்து மியான்மர் ராணுவ வீரர்கள்சுட்டிருக்கலாம். இந்திய வீரர்கள் திருப்பிச் சுட்டதில், மியான்மர் தரப்பிலும் சேதம்ஏற்பட்டது. இருப்பினும் இதுகுறித்த முழுவிவரமும் தெரியவில்லை என்றார்.
நாகாலாந்து தேசிய கவுன்சில் தீவிரவாதிகளைத் தேடும் பணியில் மியான்மர் வீரர்கள்ஈடுபட்டிருந்தனர். தனி நாடு கோரி இந்த தீவிரவாதிகள் போராடி வருகின்றனர். இந்தஅமைப்பின் தலைமையகம் மியான்மர் எல்லையில் உள்ள சீன் மற்றும் கச்சின்மாவட்டங்களில் உள்ளது. இதைத் தேடும் பணியில் ஈடுபட்டபோதுதான் இந்த மோதல்நடந்ததாக சாமா தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களாகவே, நாகாலாந்து தீவிரவாதிகளுக்கு எதிராக மியான்மர்நடவடிக்கை எடுத்து வருகிறது. அடிக்கடி மியான்மர் படைகளுக்கும்,தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்ததுப்பாக்கிச் சண்டையில் 40 தீவிரவாதிகள் வரை கொல்லப்பட்டனர்.
நாகாலாந்து தேசிய கவுன்சில் தீவிரவாதிகள், கடந்த சில ஆண்டுகளாகவேமியான்மரை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றனர். மியான்மர் எல்லைக்குள்,நாகாலாந்து மாநில எல்லைக்கு அருகே இந்த தீவிரவாதிகள் மையம் கொண்டுள்ளனர்.அங்கிருந்து இந்தியாவுக்குள் ஊடுறுவி அடிக்கடி இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்திவருகின்றனர்.
இதுதவிர, நாகாலாந்து, மியான்மர் எல்லையில் உள்ள மான் மாவட்டத்தைச் சேர்ந்த20,000 நாகா இனத்தவர், வடக்கு மியான்மரில் உள்ள சாகாங் மாவட்டத்தின் பல்வேறுபகுதிகளில் ஊடுறுவியுள்ளனர்.
இதற்கிடையே, 1000 மியான்மர் கிறிஸ்தவர்கள், அங்கிருந்து தப்பி இந்தியாவுக்குள்வந்துள்ளனர். கிறிஸ்தவ மதத்திலிருந்து, மாறி, புத்த மதத்திற்கு மாற மியான்மர் ராணுவஅரசு கட்டாயப்படுத்தியதால் அவர்கள் அங்கிருந்து தப்பி இந்தியாவில் அடைக்கலம்புகுந்துள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications