தமிழர்கள் படுகொலைக்கு இலங்கை அரசே காரணம் .. புலிகள் குற்றச்சாட்டு
கொழும்பு:
இலங்கை அரசின் திட்டமிட்ட சதி காரணமாகவே, பந்தாரவலே, மறுவாழ்வு முகாமில்,26 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று விடுதலைப் புலிகள்குற்றம்சாட்டியுள்ளனர்.
இலங்கையின் பந்தாரவலே நகரில் புதன்கிழமை 26 முன்னாள் விடுதலைப் புலிகள்படுகொலை செய்யப்பட்டனர். கிராமத்திலிருந்து வந்த நூற்றுக்கணக்கான சிங்களர்கள்,கம்பு, கத்தி, கற்களைக் கொண்டு தாக்கி இவர்களைக் கொன்றனர்.
இந்த சம்பவத்திற்கு விடுதலைப்புலிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.விடுதலைப் புலிகளின் லண்டன் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், இலங்கைஅரசின் திட்டமிட்ட சதியே இந்த படுகொலைச் சம்பவம். ராணுவம், போலீஸ் மற்றும்முகாம் அதிகாரிகள் ஆகியோர் ஒன்று சேர்ந்தே தமிழர்களைக் கொன்றுள்ளனர்.
கிராமத்தினரை வன்முறையில் ஈடுபட தூண்டியதும் அரசுதான். இலங்கை அரசே இந்தக்கோழைத்தனமான நடவடிக்கைக்கு பொறுப்பேற்க வேண்டும்.
அரசின் திட்டமிட்ட சதிக்கு எங்களிடம் போதுமான ஆதாரம் உள்ளது என்றுகூறியுள்ளனர்.
இதற்கிடையே, கொல்லப்பட்டவர்களில் 15 பேரின் உடல்கள், பிரேதப்பரிசோதனைக்குப் பிறகு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த உடல்கள் பின்னர்அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications