ஒரு வழக்கில் தூக்கு .. இன்னொரு வழக்கில் ஆயுள்
தர்மபுரி:
தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் 26 கற்பழிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்டநாகராஜனுக்கு, நகைக்காக பெண்ணைக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனைவிதிக்கப்பட்டது. ஏற்கனவே இவருக்கு மற்றொரு வழக்கில் தூக்குத் தண்டனைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தர்மபுரி மாவட்டம் பென்னகரத்தைச் சேர்ந்தவர் நாகராஜன்
( 38). கர்நாடகா மற்றும் தமிழகத்தில் பல பெண்களைக் கற்பழித்ததாக இவர் மீது 26வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது
வழக்குகள் தொடர்பாக இவரைத் தேடி கர்நாடகப் போலீசார் பல இடங்களில் தேடினர்.ஒரு முறை இவரைப் பிடித்துச் செல்லும்போது தப்பி ஓடி விட்டார்.
பின்னர் பென்னகரத்தில் கோவிந்தம்மாள் என்ற வயதான பெண்ணிடம் பணத்தைக்கொள்ளையடிக்கச் சென்றார். அவரை கொலை செய்து நகைகளைத் திருடிச் சென்றார்.இந்த வழக்குத் தொடர்பாக நாகராஜனை கிருஷ்ணகிரி போலீசார் கைது செய்தனர்.
வழக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,நாகராஜனுக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துதீர்ப்பளித்தார்.
நாகராஜன் ஏற்கனவே ஒரு வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றுள்ளார். ஆனால், 26வழக்குகளில் 24 வழக்குகளில் விடுதலை பெற்றுள்ளார். இந்த வழக்குகளில்போதுமான சாட்சியம் இல்லாததால் விடுதலை பெற்றுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications