பிரபாகரன் நிபந்தனை விதிக்கவில்லை .. நார்வே தூதர்
கொழும்பு:
இலங்கை அரசுடன் நிபந்தனையற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவிடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தயாராக இருப்பதாக நார்வேநாட்டிலிருந்து வந்துள்ள சிறப்புத் தூதர் எரிக் சொல்ஹீம் கூறியுள்ளார்.
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு முடிவு காணும் வகையில் விடுதலைப் புலிகளுக்கும்,இலங்கை அரசுக்கும் இடையே நார்வே நாடு மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில்இறங்கியுள்ளது.
நார்வே நாட்டிலிருந்து சிறப்புத் தூதராக சொல்ஹீம் கொழும்பு வந்துள்ளார்.புதன்கிழவை வவுனியா காட்டுக்குள் சென்று பிரபாகரனுடன் சொல்ஹீம் பேச்சுநடத்தினார்.
பிரபாகரனுடன் நடத்திய பேச்சு குறித்து சொல்ஹீம் கூறுகையில், தனி ஈழம் குறித்தபோராட்டத்திற்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கு பேச்சு நடத்தமுன்வருமாறு பிரபாகரனிடம் வலியுறுத்தினேன். அதற்கு ஓரளவு வெற்றியும்கிடைத்தது. பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள பிரபாகரன் ஆவலுடன் உள்ளார்.
பிரச்சினையைத் தீர்ப்பதில் விடுதலைப் புலிகள் மிகவும் ஆவலுடன் உளளனர்.பேச்சுவார்த்தைக்கும் அவர்கள் தயாராக உள்ளனர். இருப்பினும் பேச்சுவார்த்தைஅவ்வளவு சுலபமாக இருக்காது என்றே நான் கருதுகிறேன்.
பேச்சு நடத்த பிரபாகரன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. அப்படி வந்தசெய்திகள் உண்மையானவை அல்ல. இருப்பினும் அமைதித் தீர்வு தொடர்பானஅனைத்து வழிகள் குறித்தும் நாங்கள் ஆராய்ந்தோம் என்றார் சொல்ஹீம்.
இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண உதவுமாறு கடந்த ஆண்டு அதிபர்சந்திரிகாவும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனும் தனித்தனியாக கோரிக்கைவிடுத்திருந்தனர். இதை நார்வே நாடும் ஏற்றுக் கொண்டது. அதையடுத்து சொல்ஹீம்சிறப்புத் தூதராக நியமிக்கப்பட்டார். இடையில், தேர்தல் வந்து விட்டதால் அமைதிப்பேச்சுவார்த்தை பாதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் துவங்கியுள்ளது.
முன்னதாக விடுதலைப் புலிகளின் லண்டனம் அலுவலகம் வெளியிட்டசெய்திக்குறிப்பில், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு விடுதலைப் புலிகள் ஒப்புக் கொள்ளவேண்டுமானால், வட கிழக்கு மாகாணத்திலிருந்து ராணுவம் வாபஸ் பெறப்படவேண்டும், தமிழர்கள் மீதான அடக்குமுறை நிறுத்தப்பட வேண்டும் என்று நிபந்தனைவிதிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது சொல்ஹீம் பேட்டி இதற்கு வேறுபட்டதாக இருக்கிறது. சொல்ஹீம்தொடர்ந்து கூறுகையில், பேச்சுவார்த்தை எப்போது நடக்கும் என்று முடிவுசெய்யவில்லை. இதற்கு காலக் கெடு ஏதும் விதிக்கப்படவும் இல்லை. உடனடியாகஇவற்றை முடிவு செய்து விட முடியாது. பிரச்சினை தீர்வதற்கு சில வாரங்கள் ஆகலாம்,சில வருடங்கள் கூட ஆகலாம்.
விரைவில் பிரச்சினைக்குத் தீர்வு வரும் என்று மட்டும் உறுதியாக நம்புகிறேன். இந்தப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக எங்களது நேரத்தை அதிகமாகவே செலவிடுகிறோம்.முடியாது என்று நாங்கள் நினைத்தால், இதில் தலையிட்டிருக்கவே மாட்டோம் என்றர்.
கடந்த ஐந்து ஆண்டுளாகவே வெளிநாட்டுத் பிரதிநிதிகள் யாரையும் பிரபாகரன்சந்தித்ததில்லை. நார்வே தூதர்தான் முதல் வெளிநாட்டுப் பிரதிநிதி. இதுவே மிகப்பெரிய விஷயமாக பேசப்படுகிறது.
பிரபாகரனைச் சந்தித்த சொல்ஹீம், வெள்ளிக்கிழமை அதிபர் சந்திரிகாவையும்சந்தித்துப் பேசுகிறார். இருப்பினும் பிரபாகரனிடமிருந்து அவருக்கு எந்த செய்தியும்இல்லை என்று கூறப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications