நேற்றும், இன்றும், நாளையும் புலி ஆதரவாளன் .. நெடுமாறன்

Subscribe to Oneindia Tamil

நெல்லை:

நான் நேற்றும், இன்றும், நாளையும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளன்தான் என்றுதமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

1956-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ம் தேதிதான் இந்தியாவில் மொழி வாரியாகமாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அன்றைய சென்னை மாகாணத்திலிருந்து பலமாநிலங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன. தமிழ் மொழி பேசும் மக்கள் கொண்டமாநிலமாக தமிழ்நாடு உருவானது.

இந்த நாளை தமிழக சான்றோர் பேரவை தமிழக பெருவிழாவாகக் கொண்டாடிவருகிறது. 6-வது ஆண்டாக, தமிழகப் பெருவிழா நெல்லை கொக்கிரக்குளம் ரோஸ்மகால் திருமண மண்டத்தில் தொடங்கியது.

இதில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன் பேசியதாவது:

தமிழகத்தில் எந்த கட்சி, மதம், ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அதைப்பார்க்காமல் தமிழர் என்ற உணர்வோடு தமிழர்கள் அனைவரும் இந்த விழாவில்கலந்து கொள்ள வேண்டும்.

1956-ம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. இந்த விழா மற்றமாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது ம.பொ.சிவஞானம் தமிழ் மாநிலம்அமையப் போராடியவர். அவரும் அவரது அமைப்பைச் சேர்ந்தவர்களும் தமிழகபெருவிழாவைக் கொண்ட்டினார்கள்.

அதன பின்பு இப்போது அருணாச்ச்லம் இந்த விழாவைக் கொண்டாடி வருகிறார்.அவரது முயற்சியை நான் பாராட்டுகிறேன்.இந்த மாநாட்டில் பாராட்டு பெற்றவர்கள்உலக அரங்கில் தமிழுக்கு பெகுமை தேடித் தந்தவர்கள்.

தமிழகத்தில் ஒரு கூட்டம் தமிழ், தமிழனின் உணர்ச்சிகளை அழித்துவிட முயற்சிசெய்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 2-ம் தேதி மதுரையில் நடந்த தமிழர்விழாவில் நடைபெற்ற தமிழர் தேசிய இயக்க மாநாட்டில் மக்கள் தொகை பதிவேட்டில்தமிழன் என பதிவு செய்ய வேண்டும் எனக் கூறியதற்காக பலர் என்னை தேசத் துரோகிஎன்று கூறி என்னை கைது செய்ய வேண்டும் என அறிக்கை வெளியிட்டனர்.

நான் சொன்னதில் தவறு எதுவும் கிடையாது. மதம், நாடு ஒரு தேசிய இனத்திற்குஅடிப்படையாக இருக்க முடியாது. மொழி ஒன்றுதான் தேசிய இனத்திற்குஅடித்தளமாக அமைய முடியும். இதை எதிர்ப்பவர்கள் இந்தியாவின் ஒற்றுமைக்குஉலை வைப்பவர்கள் என எச்சரிக்கிறேன்.

வீரப்பனால் கடத்தி வைக்கப்பட்டுள்ள கன்னட நடிகர் ராஜ்குமாரை விடுவிக்கவேண்டும் என தமிழர் தேசியவாதிகளாகிய நாங்கள் முயற்சி செய்கிறோம். இந்தியதேசியவாதிகள் இதைப் பாராட்ட வேண்டும்.

தமிழ் தேசியவாதியை எப்படி அனுப்பலாம். விடுதலைப் புலி ஆதரவாளரை எப்படிஅனுப்பலாம் என கேட்கிறார்கள். நான் நேற்றும், இன்றும், நாளையும் விடுதலைப் புலிஆதரவாளன்தான்.

வீப்பனைச் சந்திக்க முதல்வர் என்னை அரசு தூதராக செல்லச் சொன்னதை நான்மறுத்தேன். அவர் கொடுத்த அங்கீகாரக் கடிதத்தையும் பெற வில்லை. மனித நேயஅடிப்படையில் தான் வீரப்பனைச் சந்திக்கச் சென்றேன் என நெடுமாறன் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+