காஷ்மீர் பிரச்சனை: சர்வதேச ஆய்வு குழு அமைக்க கோர்பசேவ் யோசனை
மாஸ்கோ:
இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பல்லாண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கும் காஷ்மீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண சர்வதேச ஆய்வுக்குழு ஒன்று அமைக்கலாம் என்று சோவியத் யூனியனின் முன்னாள் அதிபர் கோர்பசேவ் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் டான் ஆங்கிலப் பத்திரிகையில் கார்பசேவின் செய்தித் தொடர்பாளர் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
ஐ.நா.சபையில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவரும், பாகிஸ்தானைச் சேர்ந்தவருமான நயீம் ரத்தோர், மாஸ்கோவில் முன்னாள் அதிபர் கார்பசேவைசந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது சர்வதேச ஆய்வுக் குழு குறித்த யோசனையை கார்பசேவ் தெரிவித்தார்.
இந்த ஆய்வுக் குழுவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த பல நிபுணர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலர் இடம் பெறலாம். இவர்கள்தவிர சீனா, ஈரான், அமெரிக்கா ஆகிய நாடுகளையும் இக்குழுவில் இடம் பெறச் செய்யலாம் என்று கார்பசேவ் தரப்பில் ஆலோசனைதெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், காஷ்மீர் பிரச்சினை, இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான பிரச்சினை என்பதை கார்பசேவ் முழுமையாக புரிந்து கொண்டிருக்கிறார்.எனவே, சர்வதேச ஆய்வுக் குழு அமைப்பது குறித்தான திட்டம் வெறும் யோசனை என்ற அடிப்படையிலேயே இருக்கிறது என்றார். அவர்.
நயீம் ரத்தோர் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஐ.நா.வில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய கார்பசேவ் சந்திப்பின்போதுவெளிப்படுத்தப்பட்ட யோசனையின் பின்னணியில் நயீம் இருக்கலாம் என்று தெரிகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications