Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிதானமாக வந்த தந்தியால் நிலை தடுமாறிய குடும்பம்

Subscribe to Oneindia Tamil

ஊட்டி:

ஊட்டி அருகே, கொடுக்கப்பட்ட ஓராண்டிற்குப் பின் சென்ற மரணத் தந்தியால், குடும்பமே அதிர்ச்சிக்குள்ளானது.

ஊட்டி அருகே உள்ள மஞ்சூரைச் சேர்ந்தவர் நீலன் (45). லாரி டிரைவராக இருந்து வருகிறார். இவருக்கும் இவரது மனைவி வனஜாவுக்கும் ஏற்பட்டகுடும்பத் தகராறு காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், இவரது மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது தாய் வீடானமாண்டியாவிற்குச் சென்று விட்டார்.

இந்நிலையில் தனது மனைவியைப் பிரிந்து வாடிய நீலன், அவரை வரவழைக்கப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். கடந்த 1999ம் ஆண்டு நவம்பர்முதல் தேதியில் நீலன் இறந்து விட்டதாகவும், உடனே புறப்பட்டு வரும்படியும், அவரது மனைவிக்கு அவரே தந்தி கொடுத்தார். ஆனால் மனைவிதிரும்பி வரவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த நீலன், நேரடியாகப் புறப்பட்டுச் சென்று மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வந்து அமைதியாகக் குடும்பம் நடத்திவருகிறார்.

இந்நிலையில், மாண்டியாவில் உள்ள அவர்களது உறவினர்களுக்கு இந்த ஆண்டு நவம்பர் முதல் தேதியில் ஒரு தந்தி சென்றது. அந்த தந்தியில், நீலன் இறந்துவிட்டதாகவும், உடனே புறப்பட்டு வரும்படியும் இருந்தது. இதனைக் கண்ட உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

புறப்படும் அவரசத்தில், போன் செய்து சம்பவத்தை உறுதி செய்ய மறந்து விட்டனர். எனவே, நேரடியாக மஞ்சூருக்கு வந்தனர். மலர்வளையம், மாலைசகிதமாக வந்த அவர்கள் நீலனின் வீட்டிற்கு வந்தனர். அங்கு நீலன் தனது குழந்தைகளுடன் அரட்டையடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்தனர்.உறவினர்கள் மாலையும், மலர்வளையமுமாக வந்திருப்பதைப் பார்த்த நீலனுக்கு ஒன்றும் புரியவில்லை.

பின்னர் நடந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட நீலன், தந்தி அலுவலகத்திற்குச் சென்று விசாரித்தார். அங்கு தான் இது போன்ற தந்தி எதுவும்கொடுக்கவில்லை என்று புகார் தெரிவித்தார். போலீசிலும் புகார் தெரிவித்தார்.

தந்தி அலுவலகத்தில் இது தொடர்பாக போலீசார் சென்று விசாரணை செய்தனர். அப்போது, கடந்த ஆண்டு நவம்பர் முதல் தேதியில் பதிவு செய்யப்பட்டதந்திகள், தானாக மாறிச் சென்று விட்டது. எனவும், பழைய தந்திகளை கம்ப்யூட்டர் பதிவிலிருந்து அழிக்காமல் விடப்பட்டதால் இந்த தவறுநிகழ்ந்துள்ளதாகவும், தந்தி அலுவலர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும், இது போன்று 200க்கும் மேற்பட்டோருக்குத் தந்தி சென்றுள்ளதாகவும், இதனை உடனடியாக நிறுத்தி வைக்குமாறு தந்திஅனுப்பப்பட்டுள்ளதாகவும் தந்தி அலுவலர் சுப்ரமணியம் விளக்கம் அளித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+