போலீஸ் கமிஷனரை முற்றுகையிடுவோம்.. கோவை அதிமுக
கோவை:
கோவை போலீசாரை எதிர்த்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டுபோராட்டம் நடத்தப் போவதாக கோவை அதிமுக அறிவித்துள்ளது.
கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலர் வேலுச்சாமி வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியுள்ளதாவது:
கோவை போலீசார் அரசியல் கட்சிகளிடையே பாரபட்சமாக நடந்து கொள்கின்றனர்.அ.தி.மு.கவினர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன் ஜெயலலிதா மீது வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து சாலைமறியல் செய்ய அ.தி.மு.க முடிவு செய்தது. ஆனால், இவர்களை அலுவலகத்திலேயேசுற்றி வைத்துக் கைது செய்தனர்.
நான்கு பிரிவுகளின் கீழ் ஜாமீனில் வெளியே வர இயலாத அளவிற்கு வழக்கும்போட்டனர். ஆனால், தற்போது தி.மு.க. அமைச்சர் மற்றும்எம்.எல்.ஏ.வுக்கிடையிலான மோதலில் தி.மு.க. வினர் திடீர் சாலை மறியலில்ஈடுபட்டனர். இவர்களைப் போலீசார் கைது செய்து அவர்கள் மீது எவ்வித வழக்குப்பதிவு செய்யாமல் சில மணி நேரங்களிலேயே விடுதலை செய்து விட்டனர்.
மேலும், ஜெயலலிதாவின் பேச்சைக் கண்டித்து தி.மு.க. வினர் நடத்திய ஊர்வலத்தில்ஜெயலலிதாவைப் போல வேடமணிந்து கேவலப்படுத்துவது போன்று சித்தரிக்கப்பட்டஇரண்டு பெண்களை அழைத்து வந்தனர்.
இவர்களுக்கு மிகவும் பரபரப்பு மிக்க ரயில்நலையம், டவுன்ஹால், ஒப்பணக்கார வீதிபோன்ற பகுதிகளில் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கியுள்ளனர்.
அ.தி.மு.க. நடத்தும் ஊர்வலத்திற்கும் அனுமதி வழங்க வேண்டும். இந்த ஊர்வலத்தில்கருணாநிதியைக் கேலியாக சித்தரிப்போம். இந்த ஊர்வலத்திற்குஅனுமதிக்கவில்லையென்றால் போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு முற்றுகைப்போராட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ளார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications