7 என்ன 70 ஆண்டு சிறையில் இருக்கத் தயார் ...
மதுரை:
இலங்கைத் தமிழர்களுக்கு தனி நாடு கிடைக்க வேண்டுமென்று கூறிவந்த பிரதமர்வாஜ்பாய், இப்பொழுது பதவியில் நீடிப்பதற்காக இலங்கை பிரச்னை பற்றி எதுவும்பேசாமல் வாய்மூடி மெளனமாகி விட்டார். வாஜ்பாயின் இந்த நிலை கடும்கண்டனத்திற்குரியது என்று டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டினார்.
ஈழத் தமிழர்களுக்காக எழுபது ஆண்டுகள் கூட சிறைக்குச் செல்ல தாம் தயாராகஇருப்பதாகவும் ராமதாஸ் கூறினார்.
ஞாயிற்றுக் கிழமை மதுரையில் நடைபெற்ற மேற்கு தொகுதி பா.ம.க. மாநாட்டில்வாஜ்பாய் கலந்து கொண்டு பேசினார்.
இலங்கை பிரச்னையில் வாஜ்பாய் அரசு நடந்து கொள்ளும் விதம் சரியில்லை. 1986-ம்ஆண்டு இலங்கை ராணுவத்தால் தமிழர்கள் கொல்லப்பட்ட போது, டெசோஅமைப்பின் சார்பில் மதுரையில் பிரம்மாண்ட மாநாடு நடத்தப்பட்டது.
இப்போதைய முதல்வர் கருணாநிதி, திராவிட கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி,பழ.நெடுமாறன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த அந்த மாநாட்டில் இப்போதையபிரதமரும், அப்போதைய பா.ஜ.க. தலைவருமான வாஜ்பாய், பகுகுணா,சுப்ரமணியசாமி உள்ளிட்ட ஏராளமான தேசிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அந்த மாநாட்டில் பேசிய வாஜ்பாய் இலங்கை தமிழர்கள் படும் வேதனை, இந்தியமக்களின் மனதில் ஆராத புண்ணாக வேதனை தருகிறது. இலங்கை தமிழர்களுக்குதனிநாடு கிடைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
ஆனால், இப்போது வாஜ்பாய் பிரதமராகிவிட்டதால், பதவியில் நீடிப்பதற்காகஇலங்கை பிரச்னை குறித்து எதுவும் பேசாமல் வாய்மூடி மெளனமாகி விட்டார்.வாஜ்பாய் மட்டுமின்றி அப்போது இலங்கைப் பிரச்னைக்கு ஆதரவு தெரிவித்த பலதலைவர்களும் இப்போது அப்பிரச்னை பற்றி பேசவே தயங்குகின்றனர். இது மிகவும்கண்டிக்கத்தக்கது.
இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன். இந்தவிஷயத்தில் பிரதமர் வாஜ்பாய் என்னை எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியாது.புலிகளுக்கு ஆதரவாகப் பேசினால், கைது செய்து ஏழு ஆண்டுகள் சிறையில்அடைக்கலாம் என்று கூறுகிறார்கள்.
ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுப்பதற்காக என்னை கைது செய்து ஏழு ஆண்டுகள்என்ன?எழுபது ஆண்டுகள் சிறையில் அடைத்தாலும் அதைப்பற்றி கவலைப்படமாட்டேன். ஒரு வேளை நான் சிறையில் அடைக்கப்பட்ட்ால், எனக்குப்பின் எனதுமகன் அன்பு மணி மற்றும் வாரிசுகள் இலங்கைத் தமிழர் பிரச்னைக்காகபாடுபடுவார்கள்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு பல முறைபோட்டிகளில் தோற்றதன் மூலம் நாட்டுக்கு துரோகம் செய்து விட்டனர். அவர்களைநடுத்தெருவில் நிறுத்தி வைத்து கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்.
திண்டுக்கல் பகுதியில் உள்ள மலை வாழ் மக்களுக்கு உடனடியாக ஜாதிச் சான்றிதழ்வழங்கக் கோரி வரும் டிசம்பர் மாதம் 12-ம் தேதி திண்டுக்கல்லில் போராட்டம்நடத்தப்படும். இந்த போராட்டத்தில் 25,000-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள்கலந்து கொள்வார்கள்.
தமிழக அரசு செயல்படுகின்ற விதமும் சரியில்லை. விவசாயிகளின் குறைகளை போக்ககருணாநிதி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பா.ம.க.வினர் மீது தி.மு.க.அரசு பொய் வழக்கு போடுகின்றது. புதுவையில் என்மீது தாக்குதல் நடந்ததைைதொடர்ந்து உண்ர்ச்சி வசப்பட்ட பா.ம.க. வினர் ஆங்காங்கே மறியல்போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதற்காக அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்திலும், தேசீய பாதுகாப்பு சட்டத்திலும்தி.மு.க. அரசு கைது செய்திருக்கிறது. ஆனால், என்னைக் கொலை செய்யமுயன்றதுடன், வீடுகளை தீவைத்து கொளுத்திய விடுதலை சிறுத்தைகள் மீது தமிழகஅரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது எந்த வகையில் நியாயம் என்றுதெரியவில்லை என்று பேசினார் ராமதாஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications