ஆர்.எஸ்.எஸ்.சுக்கு முஸ்லீம்லீக் விடும் சவால்
கோவை:
ஆதாமை முதலாகத் தோன்றியதாக ஆர்.எஸ். எஸ் இயக்கத்தினர் ஏற்றுக் கொண்டால், நாங்கள் ராமரையும்,கிருஷ்ணரையும் முன்னோர்களாக ஏற்றுக் கொள்ளத் தயார் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர் காதர்மொகைதீன் தெரிவித்தார்.
கோவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர் கே.எம் காதர் மொகைதீன் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:
தமிழகத்தில் நடக்கும் ஒவ்வொரு சட்டசபைத் தேர்தலிலும் கூட்டணியாகப் போட்டியிடுகின்றனர். ஆனால், வெற்றிபெற்ற பின்னர் தனிக் கட்சிகள் மட்டுமே ஆட்சி அமைக்கின்றன.
கூட்டணியில் இடம் பெற்ற கட்சி எதிர்க் கட்சியாக மாறி விடுகிறது. இதனால் தனிக் கட்சியின் ஆதிக்கமேஏற்படுகிறது. அவர்களுடைய கொள்கைகளுக்கு ஏற்ப ஆட்சி அமைத்துக் கொள்கின்றனர். இந்த நிலை மாறவேண்டும்.
தேர்தல் கூட்டணியில் இடம் பெறும் கட்சி, ஆட்சியிலும் இடம் பெற வேண்டும். இந்தக் கூட்டணி ஆட்சியேதமிழகத்திற்கு நன்மை அளிக்கக் கூடியதாக இருக்கும்.
தற்போது இந்திய முஸ்லிம் லீக் தமிழ் மாநில காங்கிரஸ் அணியில் உள்ளது.
தமிழகத்தில் 3-வது அணி வருமா என்பது குறித்து இப்போது கூற முடியாது. தேர்தல் சமயத்தில் தான் இந்த முடிவுமேற்கொள்ளப்படும்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் ஓராண்டிற்குள் 10 லட்சம் உறுப்பினர்களைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம்.வரும் தேர்தலில் எந்த அணி அதிக இடங்களில் போட்டியிட இடங்கள் அளிக்கிறதோ அந்தக் கூட்டணியில் இடம்பெறுவோம். இல்லையெனில் 10 இடங்களில் நாங்கள் போட்டியிடுவது உறுதி.
கடந்த ஆட்சியை விட இந்த ஆட்சி நன்றாக உள்ளது. முஸ்லிம் சிறுபான்மையினருக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும். அரசு அறிவித்தபடி சிறுபான்மை மேம்பாட்டு நிதியில் உருது அகாடமிக்கும் நிதி அளிக்க வேண்டும்.
கோவையில் போஸ்டர் ஒட்ட எஙகள் இயக்கத்திற்கு போலீசார் அனுமதி மறுத்து வருகின்றனர். இதனைவன்மையாகக் கண்டிக்கிறோம். திருச்சியில் இம்மாதம் மாநிாடு நடத்தவுள்ளோம். இதில் கலந்து கொள்ளமூப்பனாருக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலைவர் ராமரையும் கிருஷ்ணரையும் முன்னோர்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும்எனக் கூறியுள்ளார். நாங்கள் அதை ஏற்றுக் கொள்கிறோம், ஆனால் அவர்கள் ஆதாமை முதலில் தோன்றியமுன்னோர்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications