320 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி .. இலங்கை சாதனை
கொழும்பு:
இலங்கையின் தேயிலை ஏற்றுமதி அளவு 320 மில்லியன் கிலோ என்ற சாதனை அளவை எட்டியுள்ளது.
இலங்கையில், தேயிலை உற்பத்தி அதிகரித்ததையடுத்து, ஏற்றுமதி முதன்முறையாக 300 மில்லியன் கிலோவைத் தாண்டியுள்ளது. ஆனால் உள்நாட்டு தேயிலைதேவை 25 மில்லியன் கிலோ மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
1999-ம் ஆண்டு இலங்கையின் தேயிலை உற்பத்தி வியக்கத்தக்க அளவில் 283 மில்லியன் கிலோவைத் தொட்டது. இதில் 263 மில்லியன் கிலோஏற்றுமதி செய்யப்பட்டது.
இலங்கை தேயிலை வளர்ச்சிக் கழக இயக்குநர் ஹசிதா டி ஆல்விஸ் கூறுகையில், அதிக தேயிலை உற்பத்தி மூலம் இலக்கை அடைந்து விட்டதாகநினைக்கிறோம். தேயிலை பயிரிடுவோர் சங்கத்தை தனியார்மயமாக்கியதும் இதற்கு மூல காரணமாகும்.
மேலும், தேயிலை பயிரிடுவதில் புதிய முறைகளை அறிமுகப் படுத்தியது, நல்ல உர வகைகளை உபயோகப் படுத்தியது மற்றும் அறுவடையின் போது நவீனதொழில்நுட்ப இயந்திரங்களைப் பயன்படுத்தியது கூட உற்பத்தி அதிகரிக்கக் காரணமாகும்.
சமீபத்திய வருடங்களில் ஐரோப்பிய சந்தையில் தேயிலை விற்பனையில் இலங்கை தனியிடம் பெற்று விளங்குகிறது.
ரஷ்யா 50 மில்லியன் கிலோ தேயிலையை வாங்குவதற்காக ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் இலங்கையிடமிருந்து அதிக அளவிலான தேயிலையைப் பெறும்நாடு என்ற பெயர் ரஷியாவுக்குக் கிடைத்துள்ளது.
கடந்த வாரம் இலங்கையிடமிருந்து 20 மில்லியன் கிலோ கூடுதல் தேயிலை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் ரஷ்யா கையெழுத்திட்டுள்ளது.
1999 ம் ஆண்டு, இலங்கையிடமிருந்து, ஐக்கிய அரபு நாடுகள் 41 மில்லியன் கிலோ தேயிலை வாங்கி முதலிடத்தைப் பெற்றிருந்தது. அப்போது ரஷ்யா 38மில்லியன் கிலோவை வாங்கியிருந்தது.
இந்தியாவுக்கும், அதிக அளவில் தேயிலை ஏற்றுமதி செய்ய இலங்கை விரும்புகிறது. இந்தியாவில் மேல்தட்டு வர்க்க மக்கள், தேயிலையின் தரம்நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். விலை அவர்களுக்கு இரண்டாம் பட்சம்தான்.
அதனால் அவர்களுக்கு ஏற்றவகையில் தேயிலையின் தரத்தை உயர்த்தும் வகையில் தேயிலை வளர்ச்சிக் கழகம் செயல்பட்டு வருகிறது என்றார்.
தேயிலை ஏற்றுமதியாளர் கார்ல் பெராரோ கூறுகையில், இந்தியாவில் குறிப்பாக, சென்னை, மும்பை நகரங்களுக்கு அதிக அளவில் தேயிலை ஏற்றுமதிசெய்யப்படுகிறது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications