ரங்கராஜன், நாஞ்சிலாருக்கு சட்டசபையில் புகழாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக சட்டசபை திங்கள் கிழமை தொடங்கியது. மறைந்த மத்திய அமைச்சர்ரங்கராஜன் குமாரமங்கலம், மாநில அமைச்சர் நாஞ்சில் மனோகரன் மற்றும் சமீபத்தில்இறந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியபிறகு சபை ஒத்தி வைக்கப்பட்டது.

பரபரப்பான சூழ்நிலையில் தமிழக சட்டமன்றம் திங்கள் கிழமை கூடியது. காலை 9.30மணிக்கு சபை கூடியதும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உ. சுப்ரமணியம்,ரா.பெரியசாமி, எம். மாரிமுத்து உள்ளிட்ட 9 பேர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம், தமிழகவருவாய்த்துறை அமைச்சர் நாஞ்சில் மனோகரன், சட்டமன்ற உறுப்பினர்கள்அன்பரசன் (எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.), பி.என். வல்லரசு (பார்வார்டு பிளாக்) ஆகியோர்மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் சபையில் தாக்கல் செய்யப்பட்டது.

சபை முன்னவர் என்ற முறையில் அமைச்சர் அன்பழகன் தீர்மானத்தைமுன்மொழிந்தார். அப்போது அவர் பேசுகையில், மத்திய அமைச்சர் ரங்கராஜன்குமாரமங்கலம் தனது 48-வது வயதில் 23.08.2000 அன்று காலமானார். பெருமைமிக்க அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ரங்கராஜன் மறைவு தமிழகத்திற்கு ஈடு செய்யமுடியாத இழப்பு.

நாஞ்சில் மனோகரன் தனது 71-வது வயதில் 01.08.2000 அன்று காலமானார். அவர்மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும்இருந்தவர்.

எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. வைச் சேர்ந்த அன்பரசன் மிகக் குறுகிய காலம்தான் சட்டமன்றஉறுப்பினராக இருந்தார். 01.03.2000 முதல் 29.06.2000 வரை அவர் பதவி வகித்தார்.29ம் தேதி அவர் மறைந்தார்.

பி.என். வல்லரசு உசிலம்பட்டி தொகுதியில் 2 முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றவர். 21.10.2000 திடீர் மாரடைப்பால் அவர் மரணமடைந்தார். தேவர்திருமகனின் அடியொற்றி வாழ்ந்த அவர் திருமணமே செய்து கொள்ளாமல்மக்களுக்காகவும், கட்சிக்காகவும் உழைத்தார் என்று அமைச்சர் அன்பழகன்குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து இரங்கல் தீர்மானத்தின் மீது எதிர்க் கட்சித் தலைவர்சோ.பாலகிருஷ்ணன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பழனிச்சாமி, அ.தி.மு.க.வைச்சேர்ந்த சுந்தரம், தமிழ் மாநில தேசிய லீக்கின் முகமது இஸ்மாயில், பாரதிய ஜனதாகட்சியைச் சேர்ந்தத வேலாயுதன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்கிருஷ்ணசாமி, தமிழ் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த தீரன் ஆகியோர் பேசினர்.

கடைசியாக முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்து பேசினார். அவர் பேசுகையில்ரங்கரஜன் குமாரமங்கலம் இளம் பிராயத்திலேயே காலமாகிவிட்டது பெரிய சோகம்.

அவரது தந்தையோடு எனக்கு நெருங்கிய நட்பு உண்டு. ரங்கராஜனிடம் குறுகிய காலம்பழகினாலும், அவரது நல்ல உழைப்பை புரிந்து கொண்டேன். அவர் வெற்றி பெற்றதிருச்சி தொகுதிக்கும், தமிழகத்திற்கும் நல்ல பல திட்டங்களை செய்ய வேண்டும் என்றுஎண்ணினார்.

நாஞ்சில் மனோகரன் எனது ஆருயிர் இளவல். திராவிட இயக்கத் தலைவர்களில்ஒருவராக திகழ்ந்தவர். நாடாளுமன்றத்தில் தனது ஆற்றலால் தனி இடம் பெற்றவர்.டெல்லித் தலைவர்களிடம் நெருங்கிய நட்பு கொண்டவர். தாம் ஆற்றும் பணிகளைமாதந்தோறும் குறிப்பெடுத்து எனக்கு அனுப்பி வைப்பார்.

வெளியூர்களுக்கு சென்றால் கூட என்னிடம் முன்கூட்டியே சொல்லி விட்டுத்தான்செல்வார். திரும்பி வந்த பிறகும் சென்னை வந்து விட்டேன் என்ற தகவலையும் எனக்குதெரிவிப்பார். அந்த அளவுக்கு நான் எதிர்பார்க்கும் அளவுக்கு அமைச்சர் பொறுப்பில்திறம்படச் செயலாற்றியவர் நாஞ்சில் மனோகரன்.

வல்லரசுவைப் போல் ஒரு சட்டமன்ற உறுப்பினர் இல்லையே என்று எண்ணும்அளவுக்கு அவர் நல்லவர். தனது தொகுதிக்காக 58 வாய்க்கால் திட்டத்தைசெயல்படுத்த வேண்டும் என்று நீண்ட நாள் உழைத்தவர். அதற்கான அடிக்கல் நாட்டுவிழா இப்போதுதான் நடந்தது. ஆனால், திட்ட நிறைவு விழாவின் போது அவர்இல்லாமல் போனது மிகவும் வேதனை.

அன்பரசன் கொஞ்ச நாட்கள் தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும், அவரதுதிறமையை வெளிப்படுத்தும் வகையில் செயல்பட்டார் என்றார் முதல்வர். பின்னர்இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து முன்னாள்உறுப்பினர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 2 நிமிடம் மவுனம்கடைபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சபையின் அலுவல்கள் ஒத்தி வைக்கப்பட்டுசபை 10.45 மணிக்கு முடிவுற்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+