திமுகவினர் தாக்குதலில் அதிமுக தலைவர் காயம்
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் அரசனூரில் திமுக தொண்டர்கள் ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியதில் அதிமுக கிராம பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் காங்கிரஸ்தொண்டர் உள்பட 7 பேர் காயமடைந்தனர்.
இது குறித்துப் போலீஸார் கூறுகையில், அரசனூரில் டீக் கடை ஒன்றின் வாசலில் பலர் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்திசையிலிருந்து அரிவாள்களுடன் வந்த கும்பல் ஒன்று அவர்களை சராமரியாகத் தாக்கியது.
இச்சம்பவத்தில் அதிமுக கிராம பஞ்சாயத்துத் தலைவர் முனுசாமி படுகாயமடைந்தார். அவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.பின்னர் அங்கிருந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
சமீபத்தில் தான் முனுசாமி திமுக விலிருந்து பிரிந்து அதிமுக வில் சேர்ந்தார். காயமடைந்த இன்னொருவர் சிவகங்கை கங்கிரஸ் கட்சித் துணைத் தலைவர்.
எம்.பி.கண்டனம்:
சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் எம்.பி.சுதர்ஷன் நாச்சியப்பன் இச்சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், அதிமுகபொதுக்குழுக் கூட்டத்தில், தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தால், கருணாநிதியை சிறையில் தள்ளுவோம் என்று ஜெயலலிதா பேசினார்.
ஜெயலலிதாவின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், சமீபத்தில் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் பேரணி நடத்தப்பட்டது. சிவகங்கைமாவட்டத்தில் நடந்த பேரணியில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் தா.கிருஷ்ணன் பேசிய பேச்சால், திமுக தொண்டர்கள் தூண்டி விடப்பட்டனர். இதையடுத்தேஇந்த தாக்குதல் நடந்திருக்கிறது என்று கூறியுள்ளார்.
யு.என்.ஐ.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications