பாலசிங்கத்தைப் பார்த்தது தவறா? வைகோ வருத்தம்
கோவை:
மனிதாபிமான அடிப்படையில் பாலசிங்கத்தை நான் சந்தித்தேன். இந்த சந்திப்பை அரசியல் கட்சிகள் பல்வேறுகோணங்களில் விமர்சிப்பது என்னை வேதனையடையச் செய்கிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோபேசினார்.
கோவை அருகே உள்ள மேட்டுப்பாளையத்தில் நடந்த திருமண விழாவில் ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோபேசியதாவது:
அறிஞர் அண்ணா வழியில் அடி பிறழாமல் கட்சியை நடத்தி வருகிறோம். வன்முறையை வன்மையாகக் கண்டித்துவருகிறோம். மத்திய அரசில் முக்கிய பங்கு வகித்து வருகிறோம்.
சர்வதேச நாடுகளில் நமது நாட்டின் நிலை எந்த விதத்திலும் குறைந்து விடவில்லை. இந்த நாடுகளுடன்போட்டியிடும் தகுதியை இந்தியா பெற்றுள்ளது.
தமிழர்களுக்கென தனிக் கலாச்சாரம் உள்ளது. இந்தக் காலச்சாரம் உலகளவில் புகழ் பெற்றுள்ளது. குறிப்பாகஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கை உலகளவில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழ் ஈழத்திற்காகப் பாடுபட்ட பாலசிங்கத்திற்கு இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சிகிச்சையை பிரிட்டிஷ் அரசு தான் செய்து கொடுத்து வருகிறது. நார்வே நாடு முழு செலவையும் ஏற்றுக்கொண்டுள்ளது.
தமிழன் என்ற உணர்விலும், மனிதாபிமான அடிப்படையிலும்தான் நான் பாலசிங்கத்தைச் சென்று சந்தித்தேன்.ஆனால் இங்குள்ள அரசியல் கட்சிகளோ பல்வேறு கோணங்களில் விமர்சித்து வருகின்றன. இந்த விமர்சனம்என்னை வேதனையடையச் செய்கிறது.
உடல்நிலம் குன்றிய ஒருவர் சிகிச்சை பெற்று வரும்போது தமிழர்களின் சார்பில் நான் சென்று சந்தித்தது தவறா?என்றார் வைகோ.
பின்னர், மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னை செல்ல கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்த வைகோஅங்கு தன்னைச் சந்தித்த செய்தியாளர்களிடம் பேசுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியிலும்,மாநிலத்திலும் வலுவான கூட்டணியாக இருந்து வருகிறது. வரும் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றால்,ஆட்சியில் பங்கு கேட்க மட்டோம்.
எதிரணியில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. மூன்றாவது அணி உருவாகுவதும், இல்லாமல் போவதும்தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் கையில் உள்ளது. இந்தக் கட்சி எந்த முடிவையும் உடனடியாக மேற்கொள்ளாது.
எனவே மூன்றாவது அணி தேர்தல் சமயத்தில் தான் தெரியும் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications