ரூ 1 கோடி பணத்தை ஏப்பம் விட்டவருக்கு வலைவீச்சு
திருச்சி:
திருச்சியில் ரூ. 1 கோடிக்கும் மேல் பொதுமக்களிடமிருந்து பணத்தை மோசடி செய்தது தொடர்பாக, பி.எச்.ஈ.எல். நிறுவனத்தின் பாதுகாப்புப் பிரிவு சப்இன்ஸ்பெக்டரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்துப் போலீஸார் கூறுகையில், பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின பாதுகாப்புப் பிரிவில் வேலை செய்யும் சப் இன்ஸ்பெக்டர், அங்குள்ளஊழியர்களை தான் நடத்தும் சிட் பண்ட் ஒன்றில் சேரும்படி வற்புறுத்தி வந்தார். சிட்பண்டில் பணம் செலுத்தும் முதலீட்டாளர்களுக்கு அதிக அளவு வட்டிகொடுப்பதாகவும் வாக்குறுதி அளித்தார். இதை நம்பி பலர் பணம் முதலீடு செய்தனர்.
இதற்கிடையே கருப்பசாமி அக்டோபர் மாதம் கருப்பசாமி தனது இருப்பிடத்தை மாற்றினார். மேலும் வாக்குறுதிப்படி, முதலீட்டாளர்களுக்குவட்டித்தொகை கொடுக்கவில்லை. இதையடுத்து முதலீட்டாளர்கள் பலர் போலீஸில் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து கருப்பசாமியையும், அவரது குடும்பத்தையும் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications