தடா கைதிகளை விடுவிக்க முடியாது .. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
டெல்லி:
மைசூர் சிறப்பு நீதிமன்றத்தில் 51 தடா கைதிகளை விடுதலை செய்ததை எதிர்த்து ஓய்வுபெற்ற கர்நாடக டி.எஸ்.பி. அப்துல் கரீம் தொடர்ந்த மனுவை ஏற்று தடா கைதிகள்விடுதலையை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பால், வீரப்பன் பிடியில் உள்ள கன்னட நடிகர் ராஜ்குமாரைமீட்க தமிழக, கர்நாடக அரசுகள் எடுத்த வந்த முயற்சிகளுக்கு பெரும் அடி விழுந்துள்ளது.
நீதிபதிகள் எஸ்.பி.பரூச்சா, டி.பி.மஹபத்ரா, ஒய்.கே.சபர்வால் ஆகியோர் அடங்கிய சுப்ரீம்கோர்ட் பெஞ்ச் செவ்வாய்க்கிழமை இந்த உத்தரவை பிறப்பித்தது. தீர்ப்பில் நீதிபதிகள்கூறியுள்ளதாவது:
வீரப்பன் கோரிய தடா கைதிகளுக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக மைசூர் மற்றும்சென்னை நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவுகள், சட்டப்படி சரியல்ல. குற்றவியல்நடைமுறைச் சட்டம் 321-வது விதியின் படி இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படவில்லை.
தடா கைதிகளை விடுதலை செய்தால், ராஜ்குமாரையும், பிறரையும் வீரப்பன் விடுவிப்பான்என்பதற்கு என்ன அத்தாட்சி என்று சுப்ரீம் கோர்ட் தமிழக, கர்நாடக அரசுகளைக்கேட்டிருந்தது. அதற்கு இரு மாநில அரசுகளும் தாக்கல் செய்திருந்த பதில்கள் படுமோசம்.ஏற்றுக் கொள்ளும்படியான எந்த முகாந்திரமும் அவர்களது பதிலில் இல்லை.
கடந்த பத்து ஆண்டுகளாக வீரப்பனை இரு மாநில அரசுகளாலும் பிடிக்க முடியவில்லை.ஆனால் இப்போது தடா கைதிகளை விடுவிப்பதற்காக இந்த கடத்தல் நாடகத்தைஅரங்கேற்றியிருக்கிறார்களோ என்ற சந்தேகம் எங்களுக்கு வருகிறது.
கர்நாடகம் சார்பில் ஆஜரான வக்கீல், மாநில அரசு சொன்னதற்கேற்ப நடந்துகொண்டுள்ளார். சட்டப்படி என்ன தேவையோ அதை அவர் பூர்த்தி செய்யவில்லை என்றுதீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
தீர்ப்பு வழங்கப்பட்டபோது கர்நாடக அரசு வக்கீல் நீதிமன்றத்தில் இல்லை. அதே போலவழக்கைத் தொடர்ந்த அப்துல் கரீமும் மைசூரில் இருந்தார்.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பையடுத்து மைசூர் தடா கைதிகள் மீதான வழக்கு மீண்டும் உயிர்பெற்றுள்ளது. அவர்கள் மீதான விசாரணையும் மீண்டும் துவங்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கின் பின்னணி:
வீரப்பனுக்கு உதவி செய்ததாக கூறி கர்நாடக, தமிழக அதிரடிப்படை வீரர்களால் பலர்பிடிக்கப்பட்டனர். இவர்கள் மீது தடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மைசூர் சிறையில் பலர் இவ்வாறு தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுஅடைக்கப்பட்டனர். இவர்கள் மீது கடந்த 8 ஆண்டுகளாக விசாரணையே நடக்கவில்லை.
இந்த நிலையில், நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் சென்றான். ராஜ்குமாரை விடுவிக்கவேண்டுமானால், மைசூர் சிறையில் விசாரணையின்றி அடைக்கப்பட்டு 51 தமிழ்த் தடாகைதிகளை விடுவிக்க வேண்டும் என்பதே வீரப்பனின் முக்கிய நிபந்தனையாக இருந்தது.இதையடுத்து இவர்களை ஜாமீனில் விடுவிக்க கர்நாடக அரசு முடிவு செய்தது.இதுதொடர்பாக மைசூர் சிறப்பு நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து வீரப்பனால் கொல்லப்பட்ட எஸ்.பி. ஷகீல் அகமதுவின் தந்தை அப்துல்கரீம் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார். மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தனதுவிசாரணையின்போது கர்நாடக, தமிழக அரசுகளின் செயலை கடுமையாக கண்டித்தது.விசாரைணயை மிகவும் கண்டிப்பான குறிப்புகளுடன் முடித்தது சுப்ரீம் கோர்ட்.
செவ்வாய்க்கிழமை வழங்கிய தீர்ப்பில், கைதிகளை விடுவிக்க மறுத்து விட்டது. இதனால்ராஜ்குமார் மீட்பில் பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications