சாதனை செய்ய என்ன வேண்டும் ...?
கோவை:
பெண்களுக்கு சம உரிமை கொடுத்தால் தான் சாதனை செய்ய முடியும் என்பதில்லை.பெண்களின் சாதனைக்கு எப்போதும் ஆண்கள் தடையாக இருந்ததில்லை. இனி சமஉரிமை கோரி போராட வேண்டிய அவசியம் இல்லை.
ஆண்களுக்கு சரி நிகராக சாதனை செய்யும் முயற்சி மட்டுமே பெண்களுக்குஅவசியம். ஆம், இத்தகைய வியத்தகு சாதனையைப் படைத்துள்ளார்அவிநாசிலிங்கம் பல்கலைக் கழகத்தில் படித்து வரும் மாணவி திவ்யா நாராயணன்.
18 வயதே நிரம்பிய திவ்யா நாராயணன், சமீபத்தில் நடந்த கிளைடர் விமானப்போட்டியில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
திவ்யா நாராயணனின் சொந்த ஊர் கேரள மாநிலம் கொச்சி ஆகும். தந்தைநாராயணன் ஒரு போட்டோ பிலிம் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரதுதாயார் அனந்தலட்சுமி, ஹோலி இன்டியா பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றிவருகிறார்.
கேரளாவில் பிளஸ் டூ வரை படித்த திவ்யா, கோவைக்கு பட்ட மேற்படிப்பிற்காகவந்தார். இங்கு என்.சி.சி. யில் சேர்ந்தார்.
கோவை, ராமநாதபுரத்தில் தனது பெரியம்மா வீட்டில் தங்கி படித்து வரும் இவருக்குஎன்.சி.சி. யில் ஆர்வத்தை ஏற்படுத்தியவர் என்.சி.சி. கமோடர் எம்.எம்.நாசர். இந்தமாணவியின் ஆர்வத்தைக் கண்டறிந்த அவர், கிளைடர் விமானத்தில் பறக்கும்பயிற்சியை அளிக்கத் தொடங்கினார்.
அதிகாலை 6 மணிக்கெல்லாம் துவங்கும் இப் பயிற்சியைப் பெற 15 கிலோ மீட்டர்தொலைவில் உள்ள கோவை விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டும். இதில், கைதேர்ந்தப பயிற்சி பெற்ற பின்னரே, உண்மையான விமானத்தை ஓட்டக் கற்றுக் கொள்ளமுடியும்.
கிளைடர் விமான பயிற்சியில் திவ்யா நாராயணன் ஓராண்டு காலமாக தீவிர பயிற்சிபெற்றார். கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும்போது அகில இந்திய அளவில்கிளைடர் விமானப் போட்டி பெங்களூரில் நடந்தது. இந்தப் போட்டியில் திவ்யா கலந்துகொண்டார்.
நாடு ழுவதும் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள 100 மாணவிகள் வந்திருந்தனர்.தமிழகத்தில் இருந்து கலந்து கொண்ட மாணவிகளில் திவ்யாவும் ஒருவர்.
இந்தப் போட்டியில் திவ்யா, சிறப்பாகப் பறந்து முதலிடத்தைப் பெற்றார்.
இதற்கு முன் கோவையைச் சேர்ந்த அன்னபூரணி என்ற மாணவி, 1995-ம் ஆண்டுவெற்றி பெற்றார். இவரும் அவிநாசிலிங்கம் பல்கலைக் கழகத்தில் படித்தவரே.
தனது வெற்றி குறித்து திவ்யா கூறுகையில், இந்த வெற்றி கிடைத்தது எனக்குமட்டுமல்ல, தமிழகத்திற்குப் பெருமை என நினைக்கிறேன். இந்த விருதை நான் தமிழகமுதல்வரின் கையால் பெற்றிருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பேன்.
நான் நாட்டிற்குச் சேவை செய்ய வேண்டும் என்ற வெறியில் உள்ளேன். இந்த சேவைஎப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நான் ஒரு விமானப் படைஅதிகாரியாக வேண்டும் என்பது தான் எனது லட்சியம்.
உயிரைப் பற்றி எனக்கு கவலை இல்லை. உயிருக்காக கவலைப்பட்டால் எதையும்சாதிக்க முடியாது.
கிளைடர் விமானம் ஓட்ட நான்கு கற்றுக் கொண்டால் மட்டுமே, இன்ஜின் உள்ளவிமானத்தை நன்கு இயக்க முடியும். பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்.
சாதனை செய்ய ஒன்று தன்னம்பிக்கை வேண்டும். இரண்டாவது கடவுள் பக்திவேண்டும் என்றார்.
என்ன, திவ்யா சொல்வது சரிதானே..?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications