வெல்வாரா அல்கோர்?
வாஷிங்டன்:
ராய்ட்டர்ஸ் மற்றும் எம்.எஸ்.என்.பி.சி. ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்தியஇறுதிக் கருத்துக் கணிப்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய துணை அதிபர்அல் கோர் வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
அல்கோர் முன்னிலையில் இருந்தாலும் கூட, அவருக்கும், ஜார்ஜ் புஷ் ஜூனியருக்கும்இடையே 2 சதவீதம் மட்டுமே வித்தியாசம் உள்ளது. எனவே புளோரிடோ மாநிலஓட்டுக்கள் வெற்றியை நிர்ணயிக்கக் கூடிய வாக்குகளாக கருதப்படுகிறது.
இரு நிறுவனங்களும் தொலைபேசி மூலம் வாக்காளர்களிடம் கருத்துக் கணிப்பைநடத்தின. உள்ளூர் நேரப்படி அனைத்து மாநிலங்களிலும் திங்கள்கிழமை இரவு 9மணிக்கு இந்தக் கருத்துக் கணிப்பு முடிந்தது.
நாடு முழுவதிலும் மொத்தம் 1200 பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. பிரபலகருத்துக் கணிப்பு நிபுணர் ஜான் ஸோக்பி இதை நடத்தினார். இதில் 48 சதவீதம் பேர்கோருக்கு ஆதரவாகவும், 46 சதவீதம் பேர் புஷ் ஜூனியருக்கு ஆதரவாகவும்வாக்களித்தனர்.
கிரீன் பார்ட்டி தலைவர் ரால்ப் நாடருக்கு 5 சதவீதம் பேர் வாக்களித்தனர். பிறவேட்பாளர்களான ஹாரி பிரவுன், பாட் புச்சானன் ஆகியோர் தலா அரை சதவீதம்வாக்குகளைப் பெற்றனர்.
இல்லினாய்ஸ், மிச்சிகன், பென்சில்வேனியா, வாஷிங்டன் ஆகிய மாநிலங்களில்கோருக்கு ஆதரவு அதிகம் இருந்தது. ஆனால் சொந்த மாநிலமான டென்னசியில், புஷ்கை ஓங்கியிருந்தது.
மிசெளரி, விஸ்கான்சின், புளோரிடா ஆகிய மாநிலங்களில் இருவரும் சம பலத்துடன்காணப்பட்டனர்.
முக்கியமான 9 மாநிலங்களில் மொத்தம் 153 ஓட்டுக்கள் உள்ளன. இங்கு கோருக்கு 99வாக்குகளும், புஷ் ஜூனியருக்கு 43 வாக்குகளும் கிடைக்கும் என்று தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications