மாறன் பதவி விலக கூறுகிறார் ஜெ.
மதுரை:
தூர்தர்ஷன் தேசிய ஒளிபரப்பில் ஹிந்தி திரைப்படங்கள் மட்டுமே ஒளிபரப்பப் பட வேண்டும் என்று மத்திய அமைச்சரவை எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத்தெரிவிக்காததையடுத்து, மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன் மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அதிமுகபொதுச்செயலாளர் ஜெயலலிதா திங்கள்கிழமை வலியுறுத்தினார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் எம்.ஜி.ஆர்.சிலையைத் திறந்து வைத்துப் பேசிய அவர் கூறியதாவது:
தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்படும் ஹிந்தித் திரைப்படங்களுக்கு கொடுக்கப்படும் தொகையை ரூ 8 லட்சத்திலிருந்து ரூ 12 லட்சமாக பிரச்சார் பாரதி உயர்த்தியுள்ளது.ஆனால் மண்டல ஒளிபரப்பு மூலம் ஒளிபரப்பப்படும் படங்களுக்கு ரூ. 1 லட்சம் மட்டுமே கொடுக்கப்படுகிறது. இந்த பாரபட்சமான முடிவை வாபஸ்பெற வேண்டும்.
சிவகங்கை மாவட்டம் அரசனூரில் திமுக தொண்டர்கள், அதிமுக கிராம பஞ்சாயத்துத் தலைவரையும், காங்கிரஸ் தொண்டரையும் தாக்கியுள்ளனர்.இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களைக் கைது செய்ய போலீஸார் தவறி விட்டனர்.
நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கம் முதல்வர் கருணாநிதிக்குத் துளி கூட இல்லை. என்னை அரசியல் வாழ்க்கையிலிருந்து துரத்தவேண்டும் என்பதிலேயே அவர் குறியாக இருக்கிறார் என்றார் ஜெயலலிதா.
சிலை திறப்பு விழா முடிந்ததும் திங்கள்கிழமை நள்ளிரவு ஜெயலலிதா மதுரைக்குச் சென்றார். அங்கிருந்து அவர் செவ்வாய்க்கிழமை சென்னைக்குத்திரும்புவார் என்று தெரிகிறது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications