அடுத்த ஜாதிக் கட்சி ரெடி!
கோவை:
ஈரோட்டில் இம்மாதம் நடக்கும் மாநாட்டில் "கொங்கு நாடு மக்கள் கட்சி என்ற புதிய ஜாதிக்கட்சி உருவாகிறது.
கோவை, நீலகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு உட்பட உள்ள கொங்கு மண்டலத்தில் கொங்குவேளாளக் கவுண்டர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியை மையமாகவைத்து ஏற்கனவே செழியன் உருவாக்கிய கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சங்கம் , தமிழ்தேசியக் கட்சியை உருவாக்கியது.
தற்போது இந்தக் கட்சிக்கும் எங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை எனக் கூறி,கொங்கு வேளாளாக் கவுண்டர்கள் பேரவை, புதிய கட்சியைத் துவக்குகிறது. ஏற்கனவேபிளவுபட்டிருந்த கொங்கு வேளாளக் கவுண்டர்கள் இயக்கங்களில் இது இரண்டாவதுகட்சியாகும். இன்னும் கூட ஒரு கட்சி இதே ஜாதியில் உருவாகலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை கூட்டம் பொள்ளாச்சியில் சமீபத்தில் நடந்தது.இக் கூட்டத்திற்கு மாநில தலைவர் தேவராஜன் தலைமை வகித்தார். செயலாளர் ஏ.எம்.ராஜா கலந்து கொண்டார்.
கூட்ட முடிவில் தலைவர் தேவராஜன் பேசுகையில்,
தமிழக அரசு பெரும்பான்மையினர் உள்ள சமுதாயத்திற்கு எவ்வித முன்னுரிமையையும்அளிப்பதில்லை. மதிப்புக் கொடுப்பதில்லை. எந்தக் கூட்டத்திற்கும் ஜாதிச் சங்கங்கள்அழைக்கப்படுவதில்லை.
ஒவ்வொரு ஜாதிக்கும் கட்சி என்ற போர்வை உள்ளது. இந்தப் போர்வையில் உள்ளகட்சிகள் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துகின்றன.
கொங்கு நாட்டில் 8 மாவட்டங்கள் அடங்கியுள்ளன. இதில் 1.5 கோடி பேர் கவுண்டர்சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் 69 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 12மக்களவை உறுப்பினர்களின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கின்றனர். எனவே கொங்குநாட்டை மையமாக வைத்து கொங்குநாடு மக்கள் கட்சியை துவக்க முடிவு செய்துள்ளோம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட தமிழ்தேசியக் கட்சிக்கும் எங்களுக்கும்எவ்வித தொடர்பும் இல்லை. வரும் சட்டசபைத் தேர்தலில் எந்தக் கூட்டணி எங்களுக்குஅதிக இடம் கொடுக்குமோ அந்தக் கூட்டணியில் இடம் பெறுவோம். இது தி.மு.க.வா.,அ.தி.மு.க.,வா அல்லது மூன்றாவது அணியா என்பது பின்னர் முடிவாகும்.
ஜாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கு எடுக்கப்பட வேண்டும். இந்த ஜாதி மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடுகளை அளிக்க வேண்டும்.
வரும் டிசம்பர் மாதம் ஈரோட்டில் 23-ம் தேதி கருத்தரங்கும், 24-ம் தேதி பேரணியும் நடத்ததிட்டமிட்டுள்ளோம். இந்தப் பேரணியின்போது கொங்கு நாடு மக்கள் கட்சி உதயமாகும்.
தமிழகத்தில் ஜாதிக் கட்சிகளின் எண்ணிக்கை அதிகமாக வேண்டும். அப்போது ஜாதிக்கட்சிகளின் கூட்டணி அமையும். அப்போது பல்வேறு பிரச்னைகளை சுமுகமாகத் தீர்க்கமுடியும். அரசியல்வாதிகளைக் கொண்டுள்ள கூட்டணியை விட ஜாதிக்கட்சிகளைக்கொண்ட கூட்டணி நல்லாட்சி புரியும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications