"பாலசிங்கத்தைச் சந்தித்த வைகோவை நீக்க வேண்டும்
பாண்டிச்சேரி:
ம.தி.மு.க. தலைவரும், எம்.பி.யுமான வைகோ விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர் ஆன்டன்பாலசிங்கத்தைச் சந்தித்துப் பேசியதால் மதிமுக வை, திமுக விலிருந்து விலக்க வேண்டும் என்று பாண்டிச்சேரிகாங்கிரஸ் தலைவர் வி.நாராயணசாமி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
பாண்டிச்சேரியில் அவர் நிருபர்களிடம் இதுகுறித்துக் கூறியதாவது:
திமுக, மதிமுக ஆகிய கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியில் அங்கம் வகிக்கின்றன. சமீபத்தில் மதிமுகதலைவர் வைகோ, விடுதலைப் புலிகளின் செய்தித்தொடர்பாளர் பாலசிங்கத்தைச் சந்தித்துப் பேசினார்.
இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி, வைகோவிடம் கேட்டுக் கொண்ட போதும்,தமிழக முதல்வர் கருணாநிதி இவ்விஷயத்தில் மெளனம் சாதித்து வருகிறார்.
வைகோ- பாலசிங்கத்திற்கிடையே நடந்த சந்திப்பு சட்ட விரோதமானது. மேலும் நாட்டின் பாதுகாப்புக்கே குந்தகம்விளைவிக்கக் கூடியது. இதுதவிர பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் புலிகளுக்கு ஆதரவாகக்குரல் கொடுத்து வருகிறார்.
இதன்மூலம் திமுக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகள் அனைத்தும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிக்கின்றனஎன்பது தெளிவாகிறது என்றார் நாராயணசாமி.
யு.என்.ஐ.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications