சோனியாவை ஆதரிக்க தமிழக காங். முடிவு
சென்னை:
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சோனியா காந்தியை ஆதரிப்பது என்று தமிழக காங்கிரஸ்தலைவர் இளங்கோவன் ஏற்பாடு செய்திருந்த முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் முன்னாள்எம்.எல்.ஏ.கள் கூட்டத்தில் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்தை முன்னாள் தலைவர் குமரிஅனந்தன், முன்னாள் மத்திய அமைச்சர்அருணாசலம் ஆகியோர் புறக்கணித்தனர்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சோனியா காந்தியும், அவரை எதிர்த்துஜிதேந்திர பிரசாதாவும் போட்டியிடுகின்றனர். இந் நிலையில் தமிழக காங்கிரஸ்நிர்வாகிகள் மற்றும் பிரதேச கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் சோனியாவை ஆதரித்துவாக்களிப்பது என்று ஏகமனதாக தீர்மானிப்பதற்காக ஒரு ஆலோசனைக் கூட்டத்தைமாநிலத் தலைவர் இளங்கோவன் கூட்டியிருந்தார்.
சென்னயிைல், காங்கிரஸ் அலுவலகத்தில் செவ்வாய் கிழமை காலை நடைபெற்ற இந்தகூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், முன்னாள் எம்.பி.,க்கள் மற்றும் முன்னாள்எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்குஇளங்கோவன் அளித்த பேட்டி:
தமிழக காங்கிரசார் அனைவரும் சோனியா தலைமைக்கு ஆதரவாக வாக்களிப்பது என்றுதீர்மானித்துள்ளோம். இந்த தேர்தலில் முன்னாள் தலைவர்களும் வாக்களிக்கலாம் என்றுதேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.
எனவே திண்டிவனம் ராமமூர்த்தி, தங்கபாலு, குமரிஅனந்தன் போன்றவர்கள்புறக்கணிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுவது சரியல்ல.
தமிழக காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யப்படுவது பற்றிசெவ்வாய் கிழமை மாலை கட்சியின் முக்கிய நிர்வாகிகளை கலந்து பேசிமுடிவெடுக்கப்படும். அதன் பின்னர் புதன் கிழமை வேட்புமனு தாக்கல் செய்யப்படும்என்றார் இளங்கோவன்.
இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை குமரிஅனந்தன், முன்னாள் அமைச்சர்கள்பிரபு , மரகதம் சந்திரசேகர், அருணாசலம் ஆகியோருடன் கூட்டாக சந்திக்க இளங்கோவன்திட்டமிட்டிருந்தார். அதற்காக 5 நாற்காலிகள் போட்ப்பட்டு இருந்தன. அவற்றில் அவர்கள்பெயரும் ஒட்டப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் வரவில்லை.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications