தற்கொலைக்கு முயன்று மாணவரைக் காயப்படுத்திய ஆசிரியை
கோலாலம்பூர்:
மலேசியாவில் ஆரம்பப் பள்ளி ஒன்றின் 4 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்த பள்ளி ஆசிரியை கீழே கூட்டமாக அமர்ந்திருந்தமாணவர்கள் மேல் விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இச்சம்பவத்தில் ஆசிரியையின் கை மற்றும் கால் முறிந்தது. இச்சம்பவம் ஒரு மாதத்துக்கு முன் தலைநகர் கோலாலம்பூர், கெம்பார்க் டவுனிலுள்ள ஆரம்பப்பள்ளி ஒன்றில் நடந்துள்ளது.
இதுகுறித்து மலாய் மெயில் என்ற மாலைப் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது. அந்த செய்தியில், பள்ளியின் 4-வது மாடியில் நடந்து சென்று கொண்டிருந்தஆசிரியை திடீரென அங்கிருந்து கீழே குதித்தார். கீழேஅமர்ந்திருந்த மாணவர்கள் இதை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
வேகமாக கீழே வந்த ஆசிரியை, மாணவர்கள் மத்தியில் விழுந்தார். இதில், குண்டான மாணவர் மேல்ஆசிரியை விழுந்தார். விழுந்த வேகத்தில், ஆசிரியையின்கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது. குண்டு மாணவருக்கும் உடலில் லேசான சிராய்ப்பும், காயமும் ஏற்பட்டது.
ஆசிரியையும், மாணவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீஸார் இதுகுறித்துக் கூறுகையில், பள்ளி ஆசிரியையின் தற்கொலை முயற்சி உண்மையேஎன்றனர். ஆனால் பள்ளி நிர்வாகம் இதுகுறித்து பதிலேதும் கூறவில்லை.
தற்கொலை செய்ய முயற்சித்த ஆசிரியைக்கு 40 வயதுக்குள் இருக்கலாம். நல்ல ஆசிரியை என்ற பெயர் எடுத்தவர் என்று கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications