கிணற்றுக்குள் ஒரு பிரசவம்

Subscribe to Oneindia Tamil

திருச்சூர்:

தண்ணீர் எடுக்கும்போது கிணற்றிற்குள் தவறி விழுந்த கர்ப்பிணிப் பெண்ணுக்குகிணற்றிலேயே பிரசவம் ஆனது. அழகான பையனை அவர் பெற்றெடுத்தார்.

தகவல் அறிந்ததும், தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து குழந்தையும், தாயும்பத்திரமாக மீட்டனர்.

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் வசந்தா (30). இவர் நிறைமாத கர்ப்பிணியாகஇருந்தார். திங்கள்கிழமை மாலை இவர் தனது வீட்டிற்கு அருகே இருந்த கிணற்றில்தண்ணீர் எடுக்கச் சென்றார்.

கிணற்றிற்குச் சரியான சுற்றுச் சுவர் இல்லை. இந்த நிலையில் தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்தபோது வசந்தா தவறி கிணற்றிற்குள் விழுந்து விட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தோர், உதவி கேட்டு குரல் எழுப்பினர்.

வசந்தாவின் உறவுக்காரப் பெண் ஒருவர் கிணற்றிற்குள் இறங்கி, கயிறு மூலம் வசந்தாவைகட்டி, நீருக்குள் வசந்தா மூழ்கி விடாமல் பிடித்துக் கொண்டார். இந்த நிலையில்,வசந்தாவுக்கு கிணற்றிற்குள்ளேயே பிரசவம் ஆகிவிட்டது. அழகான ஆண் குழந்தையைஅவர் பெற்றார்.

இதற்கிடையே, தீயணைப்புப் படை வீரர்களுக்குத் தகவல் அனுப்பப்பட்டு அவர்களும்வந்து சேர்ந்தனர். வசந்தாவையும், அவரது குழந்தையையும் ஸ்டிரச்சர் மூலம் காப்பாற்றிவெளியே கொண்டு வந்தனர்.

உடனடியாக இருவரும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். அவர்கள்நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+