ஐரோப்பாவில் மூலிகை கண்காட்சி: இந்தியாவுக்கு அழைப்பு
குன்னூர்:
ஐரோப்பாவில் நடக்கும் கண்காட்சியின் மூலம் மூலிகை மற்றும் உலர் பழங்களை இந்தியாவிலிருந்து அதிக அளவில் ஏற்றுமதிசெய்யும் வாய்ப்பு கிடைக்கும் என கண்காட்சியின் அமைப்பாளர் மில்லர் மேன் தெரிவித்தார்.
குன்னூரில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
இந்திய மூலிகை மற்றும் உலர் பழங்கள், வாசனைப் பொருட்களுக்கு சர்வதேச அளவில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.ஐரோப்பாவில் வரும் நவம்பர் 20 முதல் 22ம் தேதி வரை நடக்கும் கண்காட்சியில் பங்கேற்க பல்வேறு நாடுகளிலிருந்துவர்த்தகர்கள் வருகை தருகின்றனர்.
பல நாடுகள் தங்கள் நாட்டில் கிடைக்கும் வாசனை திரவியங்கள், அபூர்வ உலர் பழவகைகள் ஆகியவற்றைக் காட்சிக்குவைக்கின்றன. இந்த கண்காட்சி பிராங்க்பர்ட் நகரில் நடக்கவுள்ளது.
கண்காட்சியில் 300 ஏற்றுமதியாளர்கள் கலந்து கொள்வவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் 65 சதவீதத்தினர் ஐரோப்பிய நாடுகளில் இருந்தும், ஆசிய நாடுகளிலிருந்து 18 சதவீதத்தினரும் ஜப்பான் மற்றும்அமெரிக்காவிலிருந்து 10 சதவீதத்தினரும் பங்கேற்கின்றனர்.
80 சதவீத பார்வையாளர்கள் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பங்கேற்கின்றனர். 20 சதவீதத்தினர் ஆசிய நாடுகளிலிருந்து வரஉள்ளனர்.
அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து வர்த்தகர்கள் வருகை எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவிலிருந்து அதிக அளவு ஏற்றுமதியாளர்கள் பங்கேற்றால் ஏற்றுமதியைப் பெருக்க வாய்ப்பு ஏற்படும். ஏனெனில்இந்தியாவில் கிடைக்கும் இத்தகைய வாசனை திரவியங்கள், மூலிகைப் பொருட்கள் எல்லமே இயற்கையில் கிடைக்கக் கூடியவை.
இயற்கையாக உள்ள பொருட்களுக்குத் தான் சர்வதேச மார்க்கெட்டில் நில்ல வாய்ப்பு ஏற்பட்டு வருகிறது. மக்களின் வாழ்க்கைத்தரம் இயற்கையோடு இணைந்ததாக இருக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.
எனவே ஏற்றுமதியை அதிகரித்துக் கொள்ள இந்தியாவிற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்றார்.












Click it and Unblock the Notifications