ஏர்-இந்தியாவை வாங்க 2 நிறுவனங்கள் போட்டி
டெல்லி:
ஏர்-இந்தியா நிறுவனத்தை வாங்க இரு நிறுவனங்கள் முன் வந்துள்ளன.
ஏர் இந்தியாவின் 40 சதவீத பங்குகளை தனியார் நிறுவனத்துக்கு விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதை வாங்க இதுவரை 2நிறுவனங்களும், விமானிகள் சங்கமும் முன் வந்துள்ளன.
இந்தியாவின் டாடா-சிங்கப்பூரின் தொழில்துறைக் குழுமம் ஆகியவை இணைந்து ஏர் இந்தியாவை வாங்க முன் வந்துள்ளன.
அதே போல எமிரேட்ஸ் ஏர்லைன் நிறுவனமும் ஏர் இந்தியாவை வாங்க ஆர்வம் காட்டுகிறது. ஆனால், அன்னிய நாட்டுநிறுவனம் 26 சதவீத பங்குகளை மட்டுமே வாங்க முடியும். எனவே, ஏர் இந்தியாவை வாங்க வேண்டுமெனில் ஒரு இந்தியநிறுவனத்துடன் இணைந்து வந்தால் மட்டுமே எமிரேட்ஸ் ஏர்லைன்சால் ஏர் இந்தியாவை வாங்க முடியும். ஆனால், இதுவரைஇந்திய பார்ட்னர் யாரும் எமிரேட் ஏர்லைன்சுக்குக் கிடைக்கவில்லை.
இந் நிலையில் இந்திய விமானிகள் சங்கமும் ஏர்-இந்தியாவை வாங்க முன் வந்துள்ளன. மோர்கன் ஸ்டான்லி நிதி நிறுவனத்தின்உதவியுடன் இதை வாங்கத் தயாராக இருப்பதாக விமானிகள் சங்கம் அறிவித்துள்ளது. வேறு எந்த தனியார் நிறுவனத்தைப்போலவே தங்களாலும் ஏர்-இந்தியாவை சிறப்பாக இயக்க முடியும் என விமானிகள் சங்கம் அறிவித்துள்ளது.
ஏர் இந்தியாவின் மொத்த பங்குகளில் 40 சதவீதத்தை மட்டுமே விற்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் 40 சதவீதபங்குகளை அரசு தன்னிடமே வைத்திருக்கும். மீதமுள்ள 20 சதவீத பங்கை பொதுமக்களுக்கு விற்கும்.
ஏர் இந்தியாவில் 40 சதவீதத்தை வாங்க முன் வரும் நிறுவனம் குறைந்தபட்சம் 10,000 கோடி நிதி வைத்திருக்க வேண்டும் என்றும்நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏர் இந்தியாவை வாங்கும் நோக்கத்தில்உள்ளது. இவர்களும் தங்களது டெண்டரை சமர்பிக்க உள்ளனர்.
இதன் பின்னர் மத்திய அரசு இந்த டெண்டர்களை ஆராயந்து யாருக்கு விற்பது என முடிவெடுக்கும். இதற்கு குறைந்தபட்சம் 6மாதங்கள் ஆகும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications