பிரச்சனையில் சன் டிவி கோடீஸ்வரன்
சென்னை:
கோடீஸ்வரன், மகாலட்சாதிபதி ஆகிய நிகழ்ச்சிகளை சன் மற்றும் விஜய் டிவிக்களில் ஒளிபரப்புவதை தடுக்குமாறு அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னைஉயர்நீதிமன்றம் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சேலத்தைச் சேர்ந்த ஆடிட்டர் பாலு என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
சன் டிவியில் கோடீஸ்வரன் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. விஜய் டிவியில் மகாலட்சாதிபதி நிகழச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
இந்தப் பரிசுப் போட்டி நிகழ்ச்சிகள் சூதாட்டம் போன்றவை. இந்தப் போட்டி நிகழ்ச்சிகள் பொதுமக்கள் மனதில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.போட்டிகளில் வழங்கப்படும் பரிசுகள் ஒரு கோடி மற்றும் ரூ 5 லட்சம்.
1955 ம் ஆண்டு பரிசு போட்டி சட்டம் பிரிவு 4 ன் கீழ் ஒவ்வொரு பரிசுப் போட்டியிலும் ஒரு மாதத்தில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் பரிசின் மதிப்பு இருந்தால்,அந்தப் பரிசுப் போட்டியை நடத்த சட்டப்படி அனுமதியில்லை.
எனவே கோடீஸ்வரன், மகாலட்சாதிபதி நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனுமதியளிக்க அரசுக்குத் தடை விதிக்க வேண்டும்.
மேலும் இந்த பரிசு போட்டிகளை சன் மற்றும் விஜய் டிவி நடத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புஅமைச்சகம், மாநில உள்துறை செயலாளர், போலீஸ் டிஜிபி மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications