தகவல் தொழில் நுட்பம்மூலம் மருத்துவத்தில் புதிய புரட்சி

Subscribe to Oneindia Tamil

கோவை:

தகவல் தொழில்நுட்ப புரட்சியில் மருத்துவத்திற்கு முதல் அடி கோவையில் பதிக்கப்பட்டது.

ஜெர்மனில் ரோபோட் செய்த ஆபரேஷன் கோவையில் நேரடியாக ஒளிபரப்பானது.

கோவையில் சர்வதேச அளவிலான டாக்டர்கள் கலந்து கொள்ளும் லேப்ரோ சர்ஜ் 2000 என்ற கருத்தரங்கு துவங்கியது

இதில் சர்வேதேச நாடுகளிலிருந்து வந்திருந்த 800க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கில்அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், பங்களாதேஷ், இலங்கை, சவூதி அரேபியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த டாக்டர்கள் அதிகஅளவில் கலந்து கொண்டனர்.

இந்த கருத்தரங்கு கோவையில் உள்ள ராஜஸ்தானி சங்கத்தில் இரண்டு நாட்களாக நடை பெற்று வருகிறது. நாளை (நவம்பர்.12)ம்தேதி நிறைவு பெறுகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியாக ஜெர்மனில் ரோபோட் செய்த ஆபரேஷன் கோவையில் பெரிய திரைஒன்றில் ஒளிபரப்பானது. இந்த நேரடி ஒளிபரப்பு, தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் ஒரு முக்கிய நிகழ்ச்சியாகபார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இன்னும் சில மாதங்களில் தகவல் தொழில்நுட்ப புரட்சி உயரும்போது, உலகில் எந்த மூலையில் நோயாளி இருந்தாலும், டாக்டர்எங்கிருந்தாலும், தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபரேஷன் செய்ய முடியும். இதற்கு முதற்கட்டமாக ஜெர்மனியில்ரோபோட் நடத்திய ஆபரேஷனை டாக்டர்கள் நேரடியாகப் பார்த்தனர். இந்த ஒளிபரப்பின்போது டாக்டர்கள் சந்தேகங்களைஜெர்மனியில் கேட்டறிந்தனர்.

ஜெர்மன் நாட்டு நேரப்படி அங்கு காலை 8 மணிக்கு செய்யப்பட்ட இந்த ஆபரேஷன் இங்கு பகல் ஒரு மணிக்கு கருத்தரங்கில்ஒளிபரப்பானது. இந்த ஆபரேஷனை ரோபோ செய்து கொண்டிருந்தபோது இது தொடர்பான சந்தேகங்களை ஜெர்மனியில் உள்ளடாக்டர்களிடம், கருத்தரங்கில் இருந்த டாக்டர்கள் கேட்டறிந்தனர்.

இங்கு இங்கிலாந்தைச் சேர்ந்த டாக்டர் மெகமோகன், பிரான்ஸ் டாக்டர் டூலக், அமெரிக்க டாக்டர் சால்கி, இந்திய டாக்டர்பழனிவேலு ஆகியோர் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

இந்த ஆபரேஷன் குறித்து டாக்டர் பழனிவேலு கூறுகையில், ரோபோ மூலம் செய்யப்படும் இந்த ஆபரேஷன் மிகவும்துல்லியமானதாக அமையும். ரோபோ மூலம் வயிற்றினுள் எந்த இடத்திலும் கூட துல்லியமாக ஆபரேஷன் செய்ய முடியும்.

இருதய ஆபரேஷன் கூட இதனால் செய்ய முடியும். இந்த ஆபரேஷன் நடக்கும்போது டாக்டர்கள் அருகில் இருக்க வேண்டியஅவசியம் இல்லை. டாக்டர் எங்கிருந்தாலும், ஆபரேஷனைப் பார்த்துக் கொண்டு ரோபோவுக்கு கட்டளைகள் பிறப்பிக்கலாம்.

மிகவும் சிக்கலான ஆபரேஷன்களைக் கூட ரோபோக்கள் எளிதாகக் கையாள்கின்றன. வருங்காலத்தில், டாக்டர்கள்எங்கிருந்தாலும், நோயாளி ஒரு ஆபரேஷன் தியேட்டருக்குள் இருந்தால் போதும். விருப்பமான டாக்டரிடம் எளிதாக ஆபரேஷன்செய்து கொள்ளலாம். இதற்கு தகவல் தொழில்நுட்பப் புரட்சி எளிதாக உதவ இருக்கிறது என்றார்.

கோவையில் இந்த கருத்தரங்கை மத்திய அமைச்சகத்தின் தேர்வு வாரிய கமிட்டித் தலைவர் ராஜசேகரன் துவக்கி வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+