புலிகள் மீதான தாக்குதல் தொடரும் .. இலங்கை ராணுவ தளபதி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், அரசுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை சண்டை நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லைஎன்று ராணுவ தளபதி லியோனல் பாலகாலே ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த நிருபர்களிடையே ஞாயிற்றுக்கிழமை அவர் பேசுகையில், இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும்முயற்சியில் நார்வே தூதுக்குழு முழு மூச்சுடன் இறங்கியுள்ளது. இதற்காக நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் விடுதலைப்புலிகள் தலைவர்பிரபாகரனைக் கடந்த நவம்பர் 1 ம் தேதி சந்தித்துப் பேசினார்.

பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இலங்கை அரசுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த பிரபாகரன் சம்மதம் தெரிவித்துள்ளார். இது அவரது நாட்டுப்பற்றைக்காட்டுகிறது.

இலங்கை அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்ட பிரபாகரன் ராணுவத்தினர், புலிகள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றுகூறியுள்ளார். இது இயலாத காரியம். இலங்கை அரசு அழைப்பு விடுத்திருந்த அமைதிப் பேச்சு வார்த்தையை பிரபாகரன், தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது.

விடுதலைப் புலிகள் பலவீனமடையும் போதெல்லாம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று கூறுவது அவர்களின் வழக்கம். இந்த முறையும்அதுபோல அல்லாமல், பிரபாகரன் தனது வாக்குறுதியில், திடமாக இருந்து பேச்சுவார்த்தை சுமூகமாக முடிய ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகளுக்கிடையே அமைதிப் ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை ராணுவம் விடுதலைப் புலிகள் மீதான தாக்குதலைத்தொடரும். சண்டை நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

2000 மாவது ஆண்டு மட்டும் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில், 2100 விடுதலைப் புலிகள் பலியாகியுள்ளனர். கடந்த இரண்டு மாதங்கள்மட்டும், இருதரப்பிலும் சேர்த்து 419 பேர் இறந்துள்ளனர். செப்டம்பர் மாதம் விடுதலைப்புலிகள், ராணுவ வீரர்களுக்கிடையே நடந்த சண்டையில் இறந்தராணுவ வீரர்களின் எண்ணிக்கை 266 ஆகும் என்றார் பாலகாலே.

ஐ.ஏ.என்.எஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+