இந்திய ஹெலிகாப்டர் விபத்து: 5 பேர் பலி
டெல்லி:
குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் காணாமல் போன ஹெலிகாப்டர் திங்கள்கிழமை பிற்பகல் கண்டு பிடிக்கப்பட்டது. இதில் பயணம் செய்த 12 வீரர்களில்5 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ள 7 பேர் காயமடைந்தனர்.
ஹெலிகாப்டர் விழுந்துள்ள இடம் புதர்களும், சகதியும் அதிகமாக இருக்கும் பகுதியாதலால், மீட்புக் குழுவினர் அந்த இடத்தை நெருங்க முடியவில்லை.தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போன இந்திய விமானப் படைக்குச் சொந்தமான எம்ஐ 8 ரக ஹெலிகாப்டர் திங்கள்கிழமை பிற்பகல் 2மணிக்கு நாலியா விமானப்படை தளம் அருகே கண்டு பிடிக்கப்பட்டது. இது இந்திய எல்லைக்குட்பட்ட பகுதியாகும்.
பாகிஸ்தான் தரப்பினர் ஹெலிகாப்டரை சுட்டிருக்கலாமோ என்று முதலில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஹெலிகாப்டர் விழுந்து கிடக்கும் பகுதிஇந்தியப் பகுதியாகும் என்பதால், ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று தெரிகிறது.
குஜராத் தலைநகர் காந்திநகர் தென்மேற்கு விமான நிலையத்திலிருந்து, காணாமல் போன ஹெலிகாப்டரைக் கண்டுபிடிப்பதற்காக சிறிய ஹெலிக்காப்டர்அனுப்பப்பட்டது. தற்போது மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
காயமடைந்தவர்களில் எல்லைப் பாதுகாப்புப் படை பூஜ் பிரிவின் இணை இயக்குநர் ஸ்வரண் சிங்கும் ஒருவர். இவர் தவிர மேலும் 4 பேரும் மீட்கப்பட்டுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர் பைலட்டும் காயமடைந்தவர்களில் ஒருவர். பூஜ் ராணுவ மருத்துவமனையில் இவர்அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் விமானப்படையைச் சேர்ந்த நான்கு ஊழியர்கள், எல்லைப் பாதுகாப்புப் படையின் நான்கு வீரர்கள் ஆகியோர் இருந்தனர்.இவர்களில் எஸ்.சி.யாதவ் என்ற வீரர் ஒரு மாதத்திற்கு முன்புதான் பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications